<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 17 செப்டம்பர், 2015

பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் தர்னா புதுச்சேரி, செப். 16- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் புதன்கிழமை தர்னா போராட்டம் நடந்தது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரமைப்பு செய்யும் வகையில் அதிகாரிகள், ஊழியர்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பேச்சின்படி ரூ.15000 கோடி அரசு வழங்க வேண்டும். தொலை தொடர்பு கோபுரங்களுக்காக பிபிஎன்எல் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி பிஎஸ்என்எல்லை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளை மறைமுகமாக தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதைக்கண்டித்து தர்னா போராட்டம் பிஎஸ்என்எல் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடந்தது. என்எப்டிஈ மாவட்ட தலைவர் பி.காமராஜ் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளரும்,ஒருங்கிணைப்பாளரருமான ஏ.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் என்.கொளஞ்சியப்பன், கே.அசோகராஜன், ஆர்.மதுசூதனன், எஸ்.ராஜநாயகம், பி.பெர்லின் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக