வெள்ளி, 29 ஜூன், 2018
செப்டம்பர் 5- தொழிலாளி-விவசாயி பாதுகாப்பு பேரணியை நோக்கி தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம்.. நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக செப்டம்பர் 5 புதுடெல்லியில் நடைபெற உள்ள ‘தொழிலாளி-விவசாயி பாதுகாப்பு பேரணி’யில் நமது BSNL ஊழியர் சங்கமும் கலந்துக் கொள்ள அறைகூவல் விட்டுள்ளது. தமிழ் மாநிலத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்பது என கோவையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் தென்கோடிமுனையில் உள்ள நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட சங்கங்கள் அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களில் இருந்து மட்டும் 109 தோழர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாவட்டத்திலிருந்து 18 தோழர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 17 தோழர்களும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 74 தோழர்களும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று மாவட்ட சங்கங்களுக்கும், குறிப்பாக 74 தோழர்களுக்கு முன்பதிவு செய்துள்ள விருதுநகர் மாவட்ட சங்கத்திற்கு தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். மற்ற மாவட்ட சங்கங்களும் தங்களின் பணிகளை விரைவு படுத்த வேண்டுகிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக