<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 23 நவம்பர், 2013

சேவைத்தரம் முன்னேற CMDக்கு கடிதம்



ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி.


ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும்  நன்றி.

புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களை அரசு ஆணை என்.86 ன்படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த நவம்பர் 18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தலைமை தபால் நிலையம் எதிரில் நடத்தி வருகின்றனர்.இப்பிரச்சனையில் புதுச்சேரி அரசு போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நமது BSNL ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள்  சார்பில் சனிக்கிழமை நவம்பர்,23  அன்று காலை 10மணிக்கு ஜி.எம் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பெண் தோழியர்கள் உட்பட 35க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில்  பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும்  மாவட்ட சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 

தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
செயலாளர்

மத்திய சங்க செய்திகள்- சுற்றறிக்கை எண்: 92-CHQ News.



வெள்ளி, 22 நவம்பர், 2013

ஆதரவு ஆர்ப்பாட்டம்..


ஆதரவு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும்  தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களை அரசு ஆணை என்.86 ன்படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த நவம்பர் 18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தலைமை தபால் நிலையம் எதிரில் நடத்தி வருகின்றனர்.இப்பிரச்சனையில் புதுச்சேரி அரசு போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நமது  சங்கம்,ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நவம்பர்,23  அன்று காலை 9.30மணிக்கு GM அலுவலகம் முன்பு  ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தில் அனைத்து தோழர்களும்,தோழியர்களும் தவராமல் பங்கேற்குமாறு மாவட்ட சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம்.

தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
செயலாளர்

புதன், 20 நவம்பர், 2013

பணி ஓய்வூ பாராட்டுவிழா

பணி ஓய்வூ பாராட்டுவிழா

நாள்;21-11-2013 மாலை 5.30மணி
இடம்:BSNLEU  சங்க அலுவலகம் ,புதுச்சேரி.

பணி ஓய்வு பெற்ற தோழர்.K.அண்ணாதுரை,TM,(கிருமாம்பாக்கம்)

பணி ஓய்வு பாராட்டு விழா கூட்டத்திற்கு அனைத்து தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
(மாவட்டசெயலாளர்)