வெள்ளி, 23 ஜனவரி, 2015
புதுச்சேரி,ஜன.22- உரிய தேதியில் மாத சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாத சம்பளம் வழங்க வேண்டும்.தொழிலாளர் நலசட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.ஈஎஸ்ஐ, ஈபிஎப் முறையாக செலுத்த நிர்வாகம் கண்கானிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.ஊழியர் சங்க மாவட்ட நிரிவாகிகள் சுப்பரமணியன்,கொளஞ்சியப்பன்,குமார்,மகாலிங்கம்,உஷா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.முன்னதாக ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டிகொண்டு இப்போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். படம் உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக