<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 2 ஜனவரி, 2015

புதுச்சேரி பிஎஸ்என்எல் பொதுமேலாளரை முற்றுகையிட்டு போராட்டம்.





புதுச்சேரி, ஜன. 2-

ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பலம் வழங்கப்படாததை கண்டித்து பிஎஸ்என்எல் பொதுமேலாளர் முற்றுகை.

 பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் கேபிள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மாதம் மாதம் உரிய தேதியில் சம்பலம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வழங்கியது போல் போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கான ஈபிஎப், ஈஎஸ்ஐ உள்ளிட்ட  சலுகைகளை முறைப்படி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள பொதுமேலாளர் அறையை இக்கோரிக்கையை வலியுறுததி முற்றுகையிட்டனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் சங்கத்தினரை பொதுமேலாளர் லீலாசங்கரி ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

முற்றுகைபோராட்டத்திற்கு தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட தலைவர் ஏ.முருகையன்,பிஎஸ்என்எல் ஊழியர் சங்க உதவித்தலைவர் என்.கொளஞ்சியப்பன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சங்க நிர்வாகிகள் சுப்பரமணியன் , குமார்,மகாலிங்கம்,உஷா உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்களும் ,ஒப்பந்த ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக