<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 6 அக்டோபர், 2015

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் குறைந்தப்பட்ச போனஸ்  ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும். லாப - நஸ்டக் கணக்கைக்காட்டி , விதிகளுக்கு புறம்பாக போனஸ் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு தலைவர் பி.காமராஜ் தலைமை தாங்கினார். கன்வீனர் ஏ.சுப்புரமணியன் முன்னிலை வகித்தார். சங்கங்களின் நிர்வாகிகள் என்.கொளஞ்சியப்பன், எம். செல்வரங்கம், மதுசூதனன், மணிக்கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி
பேசினார்கள்.

முன்னதாக மத்திய தொலைத்தொடர்புத்துறையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக