<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 30 டிசம்பர், 2013

தோழர்.P.அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா...


நமது சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.P.அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நமது மாவட்டச்சங்கத்தின் சார்பில் செவ்வாய்கிழமை (டிசம்பர்-31) மாலை 4மணிக்கு லப்போர்த் வீதியில் உள்ள PMSSS ஹாலில் நடைபெறுகிறது.இவ்விழாவில் நமது சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் செல்லப்பா மற்றும் மாவட்ட சங்க தலைவர்கள்,ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.இவ்விழாவில் நமது சங்கத்தின் அனைத்து தோழர்களும்,தோழியர்களும்  பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட சங்கத்தின் சார்பில் அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
                                                               
                                                              இவண்

S.சங்கரன்,மாவட்ட தலைவர்                      A.சுப்புரமணியன்,மாவட்ட செயலாளர்

திங்கள், 23 டிசம்பர், 2013

புறப்பகுதி கிளை பொதுக்குழுக்கூட்டம்.


புறப்பகுதி கிளை பொதுக்குழுக்கூட்டம்.

நமது கிளையின் பொதுக்குழுகூட்டம் வரும் 27.12.2013 அன்று நமதுசங்க அலுவலகத்தில்i நடைபெறுவதால் அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

                                                                             தோழமையுடன்
                                                                          K.சந்திரகேசரன் 
                                                                           ll, கிளைச்செயலர்.  

பணி ஓய்வு பாராட்டு சிறப்புக்கூட்டம்.

பணி ஓய்வு பாராட்டு சிறப்புக்கூட்டம்.

 நமது சங்க அலுவலகத்தில்   23.12.2013 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுவால் நமது பொதுச்செயலர் தோழர்.பி.அபிமன்யு அவர்களுக்கு சிறப்பான பணி ஓய்வு பாராட்டு கூட்டம் நடத்துவது என்ற அடிப்படையில் 31.12.2013 அன்று மாலை 4மணிக்கு புதுவை லப்போத்வீதியில் உள்ள PMSSS ஹாலில் நடைபெறும் சிறப்புக்கூட்டத்திற்கு அனைத்து தோழர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
                                         
                                             தோழமையுடன்
A.சுப்பரமணியன்                                                        B.மகாலிங்கம்                                                         
மாவட்ட செயலர்- BSNLEU                           மாவட்டசெயலர் -TNTCWU

Date: 21-12-2013.. தமிழ் மாநில ஊழியர் சேமநல வாரிய (TNCSWB- TAMILNADU CIRCLE STAFF WELFARE BOARD) கூட்ட முடிவுகள்- சுற்றறிக்கை எண்:100


Date: 21-12-2013. TNTCWU மாநிலச் செயற்குழு முடிவுகள்




புதன், 11 டிசம்பர், 2013

தோழர்.கே.ஜி.போஸ் அவர்கள் நினைவு தினம்.. நமது சங்கத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.ஜி.போஸ் அவர்களின் நினைவு நாளான இன்று புதன்கிழமை (11-12-13) புதுச்சேரி மாவட்ட சங்க அலுவலகத்தில் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் சுப்புரமணியன்,உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகளும்,தோழர்களும் மற்றும் நமது தோழமை சங்கமான தொலைதொடர்பு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த தலைவர்களும்,நிர்வாகிகளும் என திரளானோர் பங்கேற்று தோழர் கே.ஜி.போஸ் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.மேலும் நினைவு தினக்கூட்டத்தை முன்னிட்டு ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை மனுவை துணை பொதுமேலாளர் கே.முத்தையா சந்தித்து வழங்கப்பட்டது.







செவ்வாய், 10 டிசம்பர், 2013

Date: 09-12-2013 புதிய போனஸ் (PLI) பார்முலா பேச்சு வார்த்தை துவங்கியது-சுற்றறிக்கை எண்:98


சுற்றறிக்கை எண்:97


கறுப்புச் சரித்திரம் சரிந்தது..!


20th Circle Council Date of Meeting 28-12-2013


வெள்ளி, 6 டிசம்பர், 2013

பிள்ளைகளைக் காப்பாற்றுவோம்!

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் எல்லா மாணவர்களின் வீட்டிலும் சில ஒற்றுமைகளைக் காணலாம். தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். தினசரி, வார மற்றும் மாத இதழ்களை நிறுத்தி விடுகிறார்கள். கேளிக்கைகள் சுத்தமாக இல்லை. சிரிப்பை மறந்த வீடுகளாகிவிடுகின்றன அவை.
பேராசை ஆண்டுகள்
2 ஆண்டுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. சுயநலம், பேராசை, அதிகாரம் அனைத்தும் கலந்த நம் குடும்ப அமைப்பு சிறிய அளவிலான தன் சுதந்திரத்தையும், ஜனநாயகப் பண்புகளையும் இந்தக் காலத்தில் முற்றும் இழந்துவிடுகிறது. தாங்கள் அடைய முடியாத லௌகீகக் கனவுகளைத் தங்கள் பிள்ளைகள் எட்டிப்பிடிக்க வேண்டும் எனும் பெற்றோர்களின் ஆசை படிப்படியாக வன்முறையாக மாறிவிடுகிறது. தன் பிள்ளை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக வேண்டும் என்கிற மதிப்பெண் வேட்கை பெற்றோர்களைப் பேயாய்ப் பிடித்து ஆட்டத் தொடங்குகிறது. தாய்மார்கள் எப்போதும் விரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடத் தொடங்கிவிடுகின்றனர்.
வன்முறைக்களம்
முற்றிலும் வணிகமயமான நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு இடையே போட்டி, அடுத்த ஆண்டு கட்டணத்தை இன்னும் உயர்த்த வேண்டும் என்ற பேராசை, இவற்றின் விளைவாக நிறுவனங்கள் ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிகின்றன. வேலையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசிரியர்களும் மாணவகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, படிப்புக்காகச் செலவிடப்படும் பெருந்தொகை, விடாமல் துரத்தும் தேர்வுகள், ஆசிரியர்களின் கருணையற்ற அணுகுமுறை, அதிகக் கண்டிப்பு, உடல்ரீதியான, மனரீதியான தண்டனைகள் எல்லாம் சேர்ந்து, கடுமையான சோர்வையும் மன அழுத்தத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. பள்ளி ஒரு வன்முறைக் களமாகிவிடுகிறது. இதனால், விடுதிகளில் நிகழும் தற்கொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இவற்றில் ஒன்றிரண்டைத் தவிர, பெருமளவில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
இது விழிப்புணர்வு அல்ல
இப்படியாக, நடுத்தர வர்க்கத்தின ரிடம் வளர்ந்துகொண்டிருக்கிற இந்த மனநிலையை எவ்வகையிலும் கல்விகுறித்த விழிப்புணர்வு என எடுத்துக்கொள்ள முடியாது. குடும்பம், சமூகம், அரசு, கல்வித்துறை எனும் நிறுவனங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிற நம் சமகாலக் கல்விபற்றிய சிக்கல குறித்த உரத்த விவாதம் நம் காலத்தின் அவசியத் தேவை. கல்வியில் தனியார்மயம், வணிகமயக் கல்வி, மதிப்பெண்களை மையமாகக் கொண்ட கல்வி, இன்னும் மாறாத ஆங்கிலேயக் கல்வி முறை, படைப்பூக்க உணர்வற்ற பாடத்திட்டங்கள், கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது ஒன்றே எனக் கருதும் பெற்றோரின் பேராசை போன்ற விவாத மையங்கள் இந்தப் பிரச்சனையில் நிறைந்திருக்கின்றன. மிகவும் சிக்கலான, பன்முகத்தன்மை வாய்ந்த, சமூக, பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மக்களை உள்ளடக்கியது நம் நாடு. இங்கு ஒரே கல்விமுறை, ஒரே பாடத்திட்டம் என்பதெல்லாம் எந்த அளவுக்கு உகந்தவை என்பதுபற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். காசு உள்ளோர்க்குத் தரமான கல்வி எனும் நிலை மாற அண்மைப் பள்ளிகள் (நெய்பரிங் ஸ்கூல் சிஸ்டம்) போன்றவை குறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும்.
நிலவைப் பார்க்காத தலைமுறை
கல்விபற்றிய மனத்தெளிவைப் பெற்றோர்கள் அளவில் கொண்டு செல்லப் பண்பாட்டு நிறுவனங்களும் ஊடகங்களும் முயற்சி எடுக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறை ஆகாயத்தில் நிலவைப் பார்க்காமல், குளங்களில் மலரும் தாமரைப் பூக்களைப் பார்க்காமல், வயல்களில் நெற்பயிர்களைப் பார்க்காமல் வளர்ந்துகொண்டிருக்கின்றனர். பிராய்லர் கோழிப் பண்ணைக்கும், குழந்தை வளர்ப்பு முறைக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனே பிரதானம்.இப்போது நாம் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டியது இதுதான். பெற்றோர்களே, குழந்தைகளை அவர்களது வயதுக்கே உரித்தான குணங்களோடு வளர விடுங்கள். அவர்களை அண்டை வீட்டுக் காரர்களிடம் அன்பு செலுத்தப் பழக்குங்கள். இயற்கையை நேசிக்க வும் காப்பாற்றவும் கற்றுக்கொடுங்கள். சுதந்திரத்தைப் பேணவும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவும் சொல்லிக்கொடுங்கள். அநீதிக்கு எதிராகப் போராடும் மதிப்பீட்டை உருவாக்குங்கள். உங்கள் குழந்தை உங்களின் நிழலோ அல்லது உங்களின் பிரதியோ இல்லை. குழந்தை ஒரு தனி உயிரி. அந்த உயிரிக்குள் அளவற்ற ஆற்றல் பொதிந்திருக்கிறது. அதைச் செயல்பட அனுமதியுங்கள்.
நன்றி : இந்து (டிச.5) ஏட்டில் கரிகாலன் எழுதியுள்ள கட்டுரையின் பகுதிகள்.

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (டிசம்பர்-6) புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு சேர்ந்து நமது மாவட்டச்சங்கமும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் திரளானோர் பங்கேற்றனர்.


வியாழன், 5 டிசம்பர், 2013

மாநில செயலக முடிவுகள்- சுற்றறிக்கை எண்:96



ஆயிரம் கோடிக்கான கேள்வி- சுற்றறிக்கை எண்:95



மத்திய சங்க செய்திகள்- சுற்றறிக்கை எண்:94




கோவையில் மகளிர் பயிலரங்கம்