<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

BSNLயுடன் MTNLஇணைப்பை எதிர்த்து ஃபோரம் சார்பாக புதுவை மாவட்டத்தில் தொலைப்பேசி நிலைய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்.

BSNLயுடன்  MTNLஇணைப்பை எதிர்த்து ஃபோரம் சார்பாக 28.2.2014  இன்று மதியம் 1மணி அளவில் புதுவை மாவட்டத்தில் தொலைப்பேசி நிலைய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு  போராட்ட குழுவின் தலைவர் காமராஜ் தலைமைதாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தோழர்.A.சுப்புரமணியன்,போராட்டக்குழு கண்வீனரும் மற்றும்  SNEA மாவட்ட செயலர் தோழர்.M.சண்முகசுந்தரம்,AIBSNEA  மாவட்ட செயலர் நாராயணசாமி, இறுதியாக BSNL ஊழியர் சங்கத் தலைவர் S.சங்கரன் பேசி நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.இக்கூட்டத்திற்கு 79 தோழர்கள்,தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

புதன், 26 பிப்ரவரி, 2014

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,பிப்.26-
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுபட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்.குறைந்தபட்ச ஊதியம் என்பதற்கு பதிலாக பிஎஸ்என்எல் லின் குறைந்தபட்ச ஊதியமாக மாற்ற வேண்டும்.ஈபிஎப்,ஈபிஎப்,ஈஎஸ்ஐ,கிராஜுட்டி,போனஸ் உள்ளிட்ட சமூக பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும்.பிஎஸ்என்எல் நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும் .பிஎஸ்என்எல் சேவைகளை  மேம்படுத்த போதுமான கருவிகளை வாங்கவேண்டும்.சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.நிர்வாகம் ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,செயலாளர் சுப்ரமணியன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.உஷா,அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் குமார்,மாவட்ட செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நமது மாவட்ட செயற்குழு முடிவுகள்.

                       நமது மாவட்ட செயற்குழு முடிவுகள்.

நமது மாவட்ட செயற்குழுக் கூட்டம்   7.2.14  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக முடியு செய்யப்பட்டது.

*  BSNL  சேவை மேம்பாடு சம்மந்தமாக அனைத்து சங்கங்களையும் இணைத்து கூட்டம் நடத்துவது.
* பாலியல் புகார் கமிட்டிக்கு,நமது சங்கத்தின் சார்பாக தோழியர்                            K. கலைச்செல்வி TM நியமிக்கப்பட்டுள்ளார்.

* எழுத்தர் சுழல் மாற்றல் சம்மந்தமாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.கீழ்கண்ட தோழர்கள் செயல்படுவர்.
1. S. சங்கரன்   2. G.முருகேசன்   3. K.R.ரவிச்சந்திரன்   4. N.ரஜேஸ்வரி  
நிர்வாகத்திடம் பேசி மார்ச் மாதத்தில் சுழல் மாற்றல் இறுதி செய்திட முடிவு செய்யப்பட்டது.

* சொஸைட்டி தேர்தலில் பொதுக்கருத்து எட்டபடாத சூழலில் நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள்:1)G.முருகேசன் 2)N.கொளஞ்சியப்பன்  3)A.முருகையன்ஆகியோர்  RGB தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இதையொட்டி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தோழர்கள்: 1)  A .சுப்புரமணியன்  2) S.சங்கரன்  3) N .கொளஞ்சியப்பன்  4)G.முருகேசன் 5)K.R.ரவிச்சந்திரன் 6)M.G.ராஜேந்திரன்                                                  7) M.ஜானகிராமன் 8)A.முருகையன் 9)N.கண்ணன் TTA 10) N.ராஜஸ்வரி              11) D.கலியபெருமாள் 12) K.தயாளன் 13)K.சந்திரசேகரன்..ஆகியோர் கொண்ட பணிக்குழுவிற்கு கன்வீனராக தோழர் A.சுப்புரமணியன் செயல்படுவர்.
                                                                                                                 
                                                              தோழமையுடன்
                                   A .சுப்புரமணியன்-மாவட்ட செயலாளர் , BSNLEU,

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தனர்.

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 15வது ஆண்டு அமைப்பு தினத்தை  முன்னிட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் இரத்தானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.இந்நிகழ்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிஐடியூ பிரதேச செயலாளர் வே.கு.நிலவழகன் இரத்தான முகாமை துவக்கி வைத்து பேசினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் என்.கொளஞ்சியப்பன்,மாவட்ட செயலாளர் எ.சுப்புரமணியன்,தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் சி.குமார்,தமிழ்மாநில அமைப்பு செயலர் எஸ்.உஷா,மாவட்ட செயலாளர் பி.மகாலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதா பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் ஊர்வலமாக சென்று புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று இரத்தானம் வழங்கினார்கள்.