<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 21 டிசம்பர், 2018

Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!

Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!



The Mysuru All India Conference has taken a historic decision to strengthen working class unity. This is the time when greater unity has to be built to settle the wage revision, pension revision and to safeguard BSNL from the attacks of the government. Revival of BSNL is our historic task. Without unity, we cannot achieve all these. This is not the time to quarrel among us on petty issues. This is not the time to test who is bigger and who is smaller. Particularly, the unity of the two recognised unions- BSNLEU and NFTE- is the need of the hour. The Mysuru All India Conference deeply deliberated this. Finally, the Conference decided to get the Recognition Rule modified, to strengthen unity. As per the Non- Executives’ Recognition Rules, if the first union gets 50% votes or more, than the second union will not get recognition. The Mysuru All India Conference has unanimously passed a resolution, demanding that this clause should be removed. We are hopeful that this will pave the way for closer coordination and understanding between the BSNLEU and NFTE- the two major trade unions of BSNL

2018, டிசம்பர் 26 முதல் 29 வரை AUAB சங்கங்களின் இணைந்த பொதுக்குழுக் கூட்டங்களை நடத்திடுக…






வியாழன், 6 டிசம்பர், 2018

சீர்குலைவு வாதி மதிவாணனின் திட்டம் செல்லாது… நமது ஒற்றுமையையும் சாதனைகளையும் பாதுகாப்போம்.. ஊதிய மாற்றத்தை நோக்கி முன்னேறுவோம்…



DISRUPTOR MADIVANAN- WILL NOT SUCCEED… WE SHALL CONSOLIDATE OUR UNITY AND ACHIEVEMENTS AND MARCH AHEAD FOR WAGE REVISION REPLY TO DISTRUPTOR MADIVANAN, CS NFTE CHENNAI


ஏன் இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.



AUAB கூட்ட முடிவுகளின் தமிழாக்கம் மத்திய அமைச்சருடன் AUAB தலைவர்கள் சந்தித்து விட்டு வந்தபின் நடைபெற்ற AUAB கூட்டத்தின் முடிவுகளின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.


காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!! AUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை . இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் பி.அபிமன்யூ, பொதுச்செயலர்


நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் அன்பார்ந்த தோழரே, 30.11.2018 அன்று CMDஉடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் தரவேண்டும் என்கிற பிரச்சனயை AUAB தலைவர்கள் கடுமையாக விவாதித்தனர். மீதமுள்ள 7%ஐ ஓய்வூதிய நிதியில் BSNL கால தாமதமின்றி செலுத்த வேண்டும் என வலுவாக கோரினர். இறுதியில் மற்றுமொரு 3%ஐ 2019, மார்ச் மாதத்திலும், மீதமுள்ள 4%ஐ அடுத்த தவணையிலும் செலுத்துவதாக BSNL CMD ஏற்றுக் கொண்டார். Saturda


சனி, 1 டிசம்பர், 2018

அன்புள்ள தோழரே, 30.11.2018 அன்று AUAB தலைவர்களுக்கும் BSNL நிர்வாகத்திற்கும் இடையே இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. காலையில் BSNL CMD மற்றும் Director(HR) ஆகியோருடனும் மாலையில் Director (HR) உடனும் நடைபெற்றன. காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக BSNL நிர்வாகத்திற்கும், தொலை தொடர்பு துறை செயலாளருக்கும் இடையே தொடர்ச்சியான கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. 28.11.2018 அன்று மத்திய அமைச்சரும் BSNL CMD அவர்களை சந்தித்துள்ளார். மத்திய அமைச்சர் BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படும், ஓய்வூதிய மாற்றம் செய்யப்படும், BSNL ஓய்வூதிய பங்களிப்பு செய்வதில் அரசு விதிகள் அமலாக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு காலவரையறை நிர்ணயிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ஊதிய மாற்றம் செய்ய முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சனையிலும் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை. வெறும் உறுதிமொழிகள் மட்டுமே. மத்திய அமைச்சர் AUABயை அழைத்து விவாதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரை BSNL CMD கேட்டுக் கொண்டார். மேலும் ஊதிய மாற்ற பிரச்சனைய கையாள BSNL நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஊதியமாற்றத்தை தங்களின் பட்ஜெட்டிற்குள் தீர்வு காண்பதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு அமைச்சர் எதையும் கூறவில்லை. BSNLல் எந்த ஒரு வேலை நிறுத்தமும் நடைபெறக்கூடாது என்றும் கூறியுள்ளார். நாளை(ஞாயிற்றுக் கிழமை) நன்ப்கல் 12 மணிக்கு AUAB தலைவர்களை BSNL CMD பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அமைச்சர் டெல்லியில் இல்லை. எனவே வேலை நிறுத்ததை தொடர AUAB முடிவெடுத்துள்ளது. இந்த விவரங்களை ஊழியர்களிடம் தெரிவிப்பதுடன் வேலை நிறுத்த தயாரிப்புகளை வேகப்படுத்துமாறு மத்திய சங்கம் கேட்டு கொண்டுள்ளது.


ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL (AUAB), BSNL, Puducherry 605001. பத்திரிக்கைச் செய்தி புதுச்சேரி 02.12.2018 பெறுதல் : ஆசிரியர் செய்திப்பிரிவு, நாளிதழ் / தொலைக்காட்சி, புதுச்சேரி. அன்புடையீர், வணக்கம். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் ஒன்றிணைந்து வருகிற 03.12.2018 திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் : (1) 4-ஜி அலைக்கற்றை சேவையினை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குவதற்கு அனுமதி கொடு; (2) மூன்றாவது ஊதிய உயர்வினை 15 சதம் இணைத்து வழங்கு. (3) அனைத்து பி.எஸ்.என்.எல் பென்ஷன்தார்களுக்கும் 01.01.2017 முதல் பென்ஷனை மாற்றியமை ; (4) பி.எஸ்.என்.எல் வழங்க வேண்டிய பென்ஷன் பங்கை அரசின் விதிப்படி செலுத்து ; (5) 2-வது ஊதியக் குழுவில் விடுபட்டுப் போயுள்ள பிரச்சினைகளை தீர்த்து வை ; மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி 30.10.2018 அன்று தர்ணா போராட்டமும், அதனைத் தொடர்ந்து 14.11.2018 அன்று இந்தியா முழுவதும் ஊழியர்களின் பேரணியும் நடைபெற்றது. ஆனால் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் மேலே கண்ட கோரிக்கைகைளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது அதிலிருந்து பின்வாங்குகிறது. எனவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் வருகிற 03.12.2018 திங்கட்கிழமை முதல் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இச்செய்தியினை தங்கள் நாளிதழில் வெளியிடுவதோடு 03.12.2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொலைபேசி நிலையம் முன் நடைபெறும் ஆர்ப்ப்பாட்டச் செய்தியினையும் தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் பிரசுரிக்குமாறு / ஒலி / ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். (எம்.செல்வரங்கம்) (ஏ.சுப்ரமணியன்) தலைவர். கன்வீனர்.


திங்கள், 26 நவம்பர், 2018

PONDY STRIKE SPECIAL METTING


அகில இந்திய AUAB கூட்ட முடிவுகள்



AUAB தமிழ் மாநில தலைவர்களின் சுற்று பயண விவரம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழ் மாநில AUAB தலைவர்களின் பிரச்சார பயண விவரம்




37ஆவது தேசியக்கவுன்சில் கூட்டத்தின் சிறப்பம்சங்கள்



வெள்ளி, 16 நவம்பர், 2018

கால வரையற்ற வேலை நிறுத்ததிற்கான அறிவிப்பு இன்று கொடுக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான வேலை நிறுத்த அறைவிப்பை AUAB தலைவர்கள் இன்று BSNL CMDயிடம் வழங்கினர்.


14.11.2018 பேரணியின் தமிழக காட்சிகள் 01.01.2017 முதல் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும், உண்மை அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு, நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வு கால பலன்கள் ஆகிய கோரிக்கைகளின் மீது மத்திய அமைச்சர் 24.02.218 அன்று கொடுத்த வாக்குறுதியை அமலாக்கக் கோரி AUAB விடுத்த அறைகூவலின் படி 14.11.2018 அன்று நடைபெற்ற பேரணியின் தமிழக காட்சிகள்










AUAB தமிழ் மாநில கூட்ட முடிவுகள் தமிழ் மாநில AUAB கூட்டம் 13.11.2018 அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இணைக்கப்பட்டுள்ளது.




நாடகங்களை நம்பாதீர் BSNL ஊழியர்களின் அதிமுக்கியமான கோரிக்கைகளான 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் உண்மையான அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றை 06.11.2018ல் CMD BSNLக்கு எழுதியுள்ள கடிதம் மூலமாக DOT நிராகரித்திருந்தது. 13.11.2018 அன்று மனித வள இயக்குனரின் பார்வைக்கு இந்தக் கடிதத்தை கொண்டு சென்ற AUAB தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மனித வள இயக்குனர் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அடுத்த நாள், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த அதிகாரியை தொலை தொடர்பு துறை செயலாளர் அழைத்து, அவரது பார்வைக்கு கொண்டு வராமல் இது போன்ற கடிதம் எவ்வாறு வெளியிடப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளாராம். நம்மை பொறுத்த வரை இது ஒரு நாடகம்தான். இந்தக் கதைகளை எல்லாம் நம்ப நாம் தயாராக இல்லை. இதே தொலை தொடர்பு துறையின் செயலாளர் தான் மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்காமால் எட்டு மாத காலமாக அமர்ந்திருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. இனிமேல் நாம் வெத்து கதைகளை நம்ப தயாராக இல்லை. நடவடிக்கைகள் மட்டுமே நமக்கு தேவை. BSNLல் உள்ள 1.85 லட்ச ஊழியர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் தான் சஞ்சார் பவனில் உள்ளவர்களை நியாயமாக செயல்பட வைக்கும். எனவே கட்டுக் கதைகளையும், நயவஞ்சக நாடகங்களையும் நம்பாமல், கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவதற்கான தயாரிப்பில் முழுமையாக இறங்குவோம். நமது நியாயமான கோரிக்கைகளை வென்றடைவோம்.


03.12.2018 முதல் காலவரையற்ற் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல் அன்பார்ந்த தோழர்களே, 14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 03.12.2018 முதல் அரசின் திட்டங்களான NOFN, NFS மற்றும் LWE ஆகிய திட்டங்களையும் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது நியாயமான உரிமையான ஊதிய மாற்றத்தை வென்றடையவும், உயிரினும் இனிய BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம். 03.12.2018லிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம். இது ஒன்றே நமது; கோரிக்கைகளை வென்றடையச் செய்யும். நமது ஒன்றுபட்ட சக்தியினை அரசுக்கு உணர வைப்போம். நமது கோரிக்கையினை வென்றடைவோம்.


புதன், 14 நவம்பர், 2018

AUAB தமிழ் மாநில கூட்ட முடிவுகள்


03.12.2018 முதல் காலவரையற்ற் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல் அன்பார்ந்த தோழர்களே, 14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 03.12.2018 முதல் அரசின் திட்டங்களான NOFN, NFS மற்றும் LWE ஆகிய திட்டங்களையும் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது நியாயமான உரிமையான ஊதிய மாற்றத்தை வென்றடையவும், உயிரினும் இனிய BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம். 03.12.2018லிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம். இது ஒன்றே நமது; கோரிக்கைகளை வென்றடையச் செய்யும். நமது ஒன்றுபட்ட சக்தியினை அரசுக்கு உணர வைப்போம். நமது கோரிக்கையினை வென்றடைவோம்.


PONDY AUAB RALLY PHOTOS



PONDICHERRY AUAB RALLY




திங்கள், 5 நவம்பர், 2018

wish you all comrade Happy Diwali


ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் தலையிட CMD BSNLஇடம் வேண்டுகோள்:. 02.11.2018 அன்று DOT செயலாளரிடம் பேச்சு வார்த்தை முடிந்த பின் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் NFTE பொது செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் ஆகியோர், BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாக தரப்பில் வீட்டு வாடகைப்படி மாற்றத்தை வழங்க விரும்பாத காரணத்தால் ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதை அவரிடம் தெரிவித்தனர். 31.12.2016ல் இருந்ததை போன்று வீட்டு வாடகைப்படியை முடக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் தலைவர்கள் CMDஇடம் சுட்டிக் காட்டினார்கள். கால தாமதமின்றி ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், BSNL CMD தலையிட்டு, நிர்வாக தரப்பு உறுப்பினர்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை தரவேண்டும் என இரண்டு பொது செயலாளர்களும் அவரைக் கேட்டுக் கொண்டனர். ஊழியர் தரப்பின் கோரிக்கைகளை கவனித்த BSNL CMD, இதில் ஆவன செய்வதாக தெரிவித்தார்.


DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் AUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள்



நவம்பர் 14 பேரணியை வெற்றிகரமாக்குவோம்! DOT செயலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB முடிவு. ஏற்கனவே அறிவித்தபடி 02.11.2018 அன்று மாலை DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்ற பிரச்சனையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆனால் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றில் சில முன்னேற்றங்கள் உள்ளன. DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் நடைபெற்ற AUAB கூட்டத்தில் நவம்பர் 14 பேரணியை மிகவும் சக்தி மிக்கதாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. விவரங்கள் நாளை இணைய தளத்தில் வெளியிடப்படும்.


20.01.2019 அன்று JTO இலாகா தேர்வு நடைபெறும்!!! JTO இலாகா தேர்வை நடத்த வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வற்புறுத்தி வந்தது. இந்த பிரச்சனையை DIRECTOR(HR), GM(Rectt) மற்றும் GM(Estt) ஆகியோருடன் பலமுறை விவாதித்தது. அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள CPSU CADRE HIERARCHYயை காரணம் காட்டி JTO இலாகா தேர்வை நடத்த நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தது. எனினும் BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவு, JTO இலாகா தேர்வினை நடத்த தனது ஒப்புதலை வழங்கியது. தற்போது 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான JTO இலாகா தேர்வினை நடத்த கால அட்டவணையை கார்ப்பரேட் அலுவலகத்தின் RECRUITMENT பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி: மனுக்களை ONLINE மூலம் பதிவு துவங்கும் நாள் :- 16.11.2018 மனுக்களை ONLINE மூலம் பதிவு செய்ய இறுதி நாள் :- 20.12.2018 ONLINE மூலம் தேர்வு நடைபெறும் நாள் :- 20.01.2019


DOT செயலாளர், 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு AUAB தலைவர்களை சந்திக்கிறார். DOTயின் செயலாளர் திருமிகு அருணா சுந்தரராஜன் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் என BSNL கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. AUAB விடுத்துள்ள போராட்ட அறைகூவல்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2018, நவம்பர் 30ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது என்கிற முடிவை DOTயின் செயலாளருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். DOTயின் செயலாளருக்கும் AUAB தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பது என்பது உண்மையில் நல்லதொரு முன்னேற்றம் தான். ஆனால் 02.11.2018 அன்று நடைபெறக் கூடிய கூட்டத்திலேயே நமது அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என நமது தோழர்கள் கருதி விடக்கூடாது. மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழியின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் எட்டு மாத காலம் DOT இருந்தது என்பதுதானே நமது கடந்த கால அனுபவம். எனவே 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு மற்றும் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் தொடர்பான 2வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டு மொத்தமாக அமலாக்குவது ஆகிய நமது கோரிக்கைகளை வென்றடைவதற்கான வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஊழியர்களை தயார் படுத்தும் பணியில் தங்கு தடை ஏதும் இன்றி தொடர்ந்து ஈடுபடுவோம். ஒன்று பட்ட உறுதியான போராட்டங்களே நமது கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.


AUABயின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்தில் 30.10.2018 அன்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள் சில