<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

அகில இந்திய அறைகூவலுக்கு இணங்க பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட சங்கங்கள் சார்பில் பிஎஸ்என்எல் புதுச்சேரி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.



புதுச்சேரி,ஆக.26

 பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் ஊதியத்தை டி.ஓ.டி யின் குறைந்தபட்ச ஊதியம் என்பதற்குப் பதிலாக  பிஎஸ்என்எல் லின் குறைந்தபட்ச ஊதியமாக மாற்ற வேண்டும். ஈபிஎப்,ஈஎஸ்ஐ மற்றும் போனஸ் உள்ளிட்ட சமுக பாதுகாப்பு திட்டங்களை உறுதிபடுத்த வேண்டும்.நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தர்ணா போராட்டம் நடைபெற்றது

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிஐடியூ பிரதேச செயலாளர் நிலவழகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்லடியான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.மாவட்ட சங்க நிர்வாகிகள் கொளஞ்சியப்பன்,சுப்பரமணியன்,மகாலிங்கங்ம்,உஷா உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.





வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

Staff Welfare Board meeting will be held on 04.09.2014.


Wednesday, 13 August, 2014Read | Download வேலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் முன்னேற்றம்


கேபிள் பணிகளில் பணியாற்றுவோருக்கு Skilled Wages வழங்க உத்தரவுகேபிள் பணிகளில் பணியாற்றுவோருக்கு Skilled Wages வழங்க Wednesday, 13 August, 2014 - நமது ஒப்பந்த ஊழியர் புதுச்சேரி மாவட்ட சங்க முயற்சியால் RLC தீர்ப்பு - நமது ஒப்பந்த ஊழியர் புதுச்சேரி மாவட்ட சங்க முயற்சியால் RLC தீர்ப்பு


புதன், 6 ஆகஸ்ட், 2014

போராடும் வேலூர் தோழர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்



புதுச்சேரி, ஆக. 6
பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைக் கண்டித்து புதுச்சேரியில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் வேலூர் தொலைதொடர்பு மாவட்ட நிர்வாகத்தில் 10 ஆண்டுகளாக
பணிபுரிந்து வந்த 140 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், அவர்களை உடனே மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு தரவேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன், ஒப்பந்த
ஊழியர் சங்கம் முருகையன் தலைமை தாங்கினர்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட உதவி செயலர் எம்.ஜி.ராஜேந்திரன்,
அகில இந்திய துணைப் பொதுச் செயலர் குமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மகாலிங்கம்,மாநில அமைப்பு செயலர்  உஷா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கவுரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

போராடும் வேலூர் தோழர்களுக்கு ஆதரவாக 05.08.2014 அன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்