<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 1 மே, 2014

புதுச்சேரியில் 128வது மே தின கொடிஏற்றுவிழா.. படங்கள் மற்றும் செய்தி.









மே தின கொடிஏற்றுவிழா.. படங்கள் மற்றும் செய்தி.
BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்ககமும் இணைந்து 128வது மே தினம் புதுச்சேரியில் வியாழனன்று  1-5-2014  கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் S.சங்கரன் அவர்களும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் A.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.புதுச்சேரி தொலைப்பேசி நிலையத்தில்  இண்டோர்கிளையின் தலைவர் தோழர் A.அருணாசலமும்,G.M அலுவலகத்தில் முன்பு உள்ள கொடியை தோழியர் A.வசுமதி அவர்களும்  ஏற்றி வைத்தனர்.அதேப்போல்  ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் தமிழ்மாநில அமைப்பு செயலர்  தோழியர் S.உஷா அவர்களும் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.இவ்விழாவில் BSNL ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் கலந்து கொண்ட தொழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
A.சுப்பரமணியன்,மாவட்டசெயலர்,  BSNLEU