சனி, 31 ஜனவரி, 2015
வெள்ளி, 30 ஜனவரி, 2015
வியாழன், 29 ஜனவரி, 2015
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
வெள்ளி, 23 ஜனவரி, 2015
புதுச்சேரி,ஜன.22- உரிய தேதியில் மாத சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாத சம்பளம் வழங்க வேண்டும்.தொழிலாளர் நலசட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.ஈஎஸ்ஐ, ஈபிஎப் முறையாக செலுத்த நிர்வாகம் கண்கானிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.ஊழியர் சங்க மாவட்ட நிரிவாகிகள் சுப்பரமணியன்,கொளஞ்சியப்பன்,குமார்,மகாலிங்கம்,உஷா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.முன்னதாக ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணிகட்டிகொண்டு இப்போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். படம் உள்ளது.
வியாழன், 22 ஜனவரி, 2015
திங்கள், 19 ஜனவரி, 2015
சனி, 17 ஜனவரி, 2015
வியாழன், 15 ஜனவரி, 2015
திங்கள், 12 ஜனவரி, 2015
வியாழன், 8 ஜனவரி, 2015
BSNL லை பாதுகாக்க நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி,
மூன்றாம் நாள் நடைபெற்ற தர்ணா போராட்ட படங்கள்.
BSNL -ஐ பாதுகாப்போம் தேசத்தை பாதுகாப்போம்
BSNL ல பாதுகாக்க வலியுறுத்தி போரம் சார்பக 6.1.2015 முதல் 8.1.2015 வரை மூன்று நாட்கள் தர்ணா போராட்டம் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. 6.1.2015 நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 69 தோழர்களும் 07.1.2015 நடைபெற் இரண்டாம் தர்ணா போராட்த்தில் 79 தோழர்களும், 08.1.15 நடைபெற்ற தர்ணா போராட்த்தில்91 தோழர்களும கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்,தோழியர்களுக்கும் இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த அனைத்து தொழிற்சங்க தலைமைக்கும் புதுச்சேரி போரம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
@.. போரம் சார்பாக எடுக்கப்பட்ட ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை உடனடியாக முடித்து தருமாறும் தோழமையுடன் கேட்டுகொள்கிறோம்.
தோழமையுடன்
A.சுப்பரமணியன்,மாவட்ட செயலாளர்,BSNLEU,
புதுச்சேரி மாவட்டம்.
புதன், 7 ஜனவரி, 2015
தர்ணா அகில இந்திய Forum அறைகூவலை ஏற்று இன்று தமிழகம் முழுவதும் தர்ணா வெற்றிகரமாக நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை CGM அலுவலகத்தில் அனைத்து சங்க மாநிலச் செயலர்கள், அகில இந்திய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பல மாவட்டங்களில் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து சில புகைப்படங்கள்
செவ்வாய், 6 ஜனவரி, 2015
BSNL நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரிய்ல அதிகாரிகள்,ஊழியர்களின் மூன்று நாள் தர்ணா போராட்டம் செவ்வாய்கிழமை துவங்கியது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கிராமப்புற
சேவையை வழங்குவதால் பிஎஸ்என்எல்லுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்ட
வேண்டும். சேவையை விரைவுபடுத்தவும், மேம்படுத்தவும் புதிய கருவிகளை வாங்க
வேண்டும். நிறுவன நலனுக்கு எதிரான கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது. 4
ஜி சேவையை உடனடியாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு
அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை கட்டாயமாக்க
வேண்டும். இலவச அலைக்கற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம்
நடந்தது. இன்று தொடங்கிய போராட்டம் 3 நாட்கள் தொடர்ச்சியாக
நடத்தப்படுகிறது.
பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் செவ்வாய்கிழமை (ஜன-6)துவங்கி நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு புதுவை பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், செல்வராஜ், மணிகண்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
திங்கள், 5 ஜனவரி, 2015
வெள்ளி, 2 ஜனவரி, 2015
புதுச்சேரி பிஎஸ்என்எல் பொதுமேலாளரை முற்றுகையிட்டு போராட்டம்.
புதுச்சேரி, ஜன. 2-
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பலம் வழங்கப்படாததை கண்டித்து பிஎஸ்என்எல் பொதுமேலாளர் முற்றுகை.
பிஎஸ்என்எல்
நிறுவனத்தில் பணியாற்றும் கேபிள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உரிய தேதியில்
வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மாதம் மாதம் உரிய
தேதியில் சம்பலம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வழங்கியது போல் போனஸ் வழங்க
வேண்டும். தொழிலாளர்களுக்கான ஈபிஎப், ஈஎஸ்ஐ உள்ளிட்ட சலுகைகளை முறைப்படி
அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம்
நடைபெற்றது.
புதுச்சேரி
பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள பொதுமேலாளர் அறையை
இக்கோரிக்கையை வலியுறுததி முற்றுகையிட்டனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா
போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து
தொழிலாளர்கள் சங்கத்தினரை பொதுமேலாளர் லீலாசங்கரி ஊழியர் சங்க பிரதிநிதிகளை
அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
வியாழன், 1 ஜனவரி, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)