<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 14 மார்ச், 2017

ஓய்வூதியர்களுக்கு இரவு நேர இலவச அழைப்புத் திட்டம் அனுமதி மற்றும் பிற செய்திகள்



நீலகிரி, கடலூர் மற்றும் சேலத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தின் காட்சிகள்



வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக 16.03.2017 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சில செய்திகள்


புதன், 8 மார்ச், 2017

Memorandum to be submitted to the Governor / Collector / District Magistrate.


ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் மாற்றிஅமைக்கப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 19.01.2017 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கெஜட் அறிவிப்பைனை இணைப்பில் காணலாம். அதனை தமிழகம் முழுவதும் அமலாக்க வேண்டும் என தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 07.03.2017 தேதியிட்ட கடித எண் ADMN(A)/C-L/Guidelines/2016-17/8 மூலம் அறிவித்துள்ளது. மாவட்ட சங்கங்கள், ஒப்பந்த ஊழியர் சங்கங்களுடன் இணைந்து இதனை முறையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.





நெடுவாசலில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்களும், அதிகாரிகளும்... ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் தமிழக விளைநிலங்களை சுடுகாடாக மாற்ற நினைக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக BSNLல் உள்ள BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA ஆகிய சங்கங்கள் இணைந்து அறைகூவல் விட்டதின் அடிப்படையில் 06.03.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு சில காட்சிகள்.



மார்ச்-8 சர்வதேச மகளிர் தினம் மார்ச்- 8 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழ் மாநில BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை



நெடுவாசல் போரட்டத்திற்கு ஆதரவு… ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரியும் ஜெம் லெபாரட்டரியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியும் நெடுவாசலில் தொடர்ந்து 19 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 06.03.2017 அன்று சென்னை CGM அலுவலகம் முன்பு பெருந்திரளாக நடைபெற்ற ஆர்ப்பாட்டதின் காட்சிகள்.




’தில் கோல் கே போல்’ புதிய திட்டம் அறிமுகம் மற்றும் சில செய்திகள்




ஞாயிறு, 5 மார்ச், 2017

JTO LICE காலிப்பணியிடங்கள் 11.12.2016 அன்று நடைபெற்ற JTO LICE தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் காலிப்பணியிடங்கள் கணக்கீடு என்பது கார்ப்பரேட் அலுவலக உத்தர்விற்கு மாறாக உள்ளதை சுட்டிக்காட்டி தமிழ் மாநிலச் சங்கம் மாநில நிர்வாக்த்திடம் கடிதம் கொடுத்து விவாதித்து உள்ளது. இது தொடர்பாக பரிசீலித்து முடிவு எடுப்பதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.


JAO LICE காலிப்பணியிடங்கள் 17.07.2016 அன்று நடைபெற்ற JAO LICE தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் முதல் பட்டியலில் தேர்வு பெற்று பதவி உயர்வு பெற்றவர்கள் சிலர் தற்போது விடுபட்டு போய் உள்ளனர். மேலும் தகுதி பெற்றவர்கள் பலர் பதவி இல்லாத காரணத்தால் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். எனவே காலிப்பணியிடங்களை மறு கணக்கீடு செய்ய வேண்டும் என தமிழ் மாநில சங்கம் மாநில நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்து விவாதித்து உள்ளது. பரிசீலிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஊதிய மாற்றமும் இதர பிரச்சனைகளும்