இன்று மாலை தர்மபுரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தோழர் ஜீவா JE, மற்றும் தோழர் கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். மற்றும் நான்கு தோழர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். நேரடி நியமனத்தில் சமீபத்தில் பணியமர்த்தப் பட்ட தோழர் ஜீவா மற்றும் 20 ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் தோழர் கஜேந்திரன் ஆகியோரின் மறைவிற்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
வெள்ளி, 8 செப்டம்பர், 2017
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை 2017செப்டம்பர் 12 முதல் 14 வரை தொடர் உண்ணாவிரதப்போராட்ட அறைகூவலை ஒட்டி தமிழ் மாநில நிர்வாகம் மாநில சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. கோரிக்கைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிர்வாகமும் சாதகமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எனினும் நமது அதி முக்கியமான பிரச்சனையான உரிய தேதியில் ஊதியம் வழங்க வில்லை எனில் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும் என உறுதி பட தெரிவித்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் சென்னைக்கு அணி திரள்வதற்கான தயாரிப்பு பணிகளை நமது தோழர்கள் தொய்வின்றி தொடர வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஞாயிறு, 3 செப்டம்பர், 2017
சாலை விபத்தில் இரண்டு தோழர்கள் இறந்தனர்.இன்று மாலை தர்மபுரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தோழர் ஜீவா JE, மற்றும் தோழர் கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். மற்றும் நான்கு தோழர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். நேரடி நியமனத்தில் சமீபத்தில் பணியமர்த்தப் பட்ட தோழர் ஜீவா மற்றும் 20 ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் தோழர் கஜேந்திரன் ஆகியோரின் மறைவிற்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.
வெள்ளி, 1 செப்டம்பர், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)