<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 25 மார்ச், 2018

ஊதிய மாற்றம் தொடர்பாக DIRECTOR(PSU) DOT உடன் சந்திப்பு 24.02.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சருடன் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் BSNL ஊழியர்களின் ஊதிய மாற்ற பிரச்சனையை மத்திய அமைச்சரவைக்கு எடுத்து செல்வதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். அந்தக் கூட்டம் நடைபெற்று மூன்று வாரங்கள் முடிந்து விட்டன. எனவே இந்த பிரச்சனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக தெரிந்துக்கொள்ள BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் திரு பவன் குப்தா DIRECTOR(PSU), DOT அவர்களை 15.03.2018 அன்று சந்தித்து விவாதித்தனர். தற்போது DPEயின் ஒப்புதலை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இறுதியாக அனுப்பப்படுவதற்கு முன் மேலும் பல நடைமுறைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பணிகளை எல்லாம் விரைவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென DIRECTOR(PSU) அவர்களை வலியுறுத்தி உள்ளனர்.


தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு CHECK OFF முறை தேவையில்லை!!! அடுத்த தொழிற்சங்க அங்கீகார தேர்தலை CHECK OFF முறையில் நடத்துவது என்ற முன்மொழிவை கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் 15.03.2018 அன்று ஒரு கடிதம் மூலம் அனுப்பி, அது தொட்ர்பாக அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுள்ளது. ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்திற்காக ஏழு அங்கீகார தேர்தல்களை ரகசிய வாக்கெடுப்பு முறைப்படி BSNL நிர்வாகம் நடத்தியுள்ளது. இவற்றில் இது வரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. ஆனால் நிர்வாகம் BSNL நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடியை காரணம் சொல்லி தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. அதனை விடுத்து தேவையற்ற செலவினங்களை குறைக்க ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்களுடன் அக்கறையுடன் கூடிய ஒரு பேச்சு வார்த்தையினை நிர்வாகம் நடத்தட்டும். CHECK OFF முறையில் சங்க அங்கீகாரத்தை முடிவு செய்ய நினைக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை BSNL ஊழியர் சங்கம் மிக கடுமையாக எதிர்க்கும். அது முறைகேட்டிற்கும் தில்லுமுல்லுகளுக்கும் வழி வகுக்கும். எனவே இதனை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. நிர்வாகம் அதனை ஏற்கவில்லை என்றால்அதற்கு எதிராக போராடவும் BSNL ஊழியர் சங்கம் தயங்காது.


துணை டவர் நிறுவனம் அமைப்பதை அனுமதியோம் ஊழியர்கள் மற்றும அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்த தொலை தொடர்பு துறையும் அரசாங்கமும் வேகமாக செயல்பட்டு வருகின்றது. BSNLன் வளர்ச்சியை இந்த துணை டவர் நிறுவனம் நிறுத்திவிடும் என்ற காரணத்திற்காகவே நாம் இந்த துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றோம். BSNLஐ பலவீனப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் அரசு இறுதி முயற்சியாக BSNLன் 70,000 டவர்களை அதனிடம் இருந்து பறித்து முடமாக்க பார்க்கிறது. BSNLன் உயிர் மூச்சு அதன் டவர்கள்தான். அந்த டவர்கள் BSNLஇடம் இருந்து பறிக்கப்பட்டது என்று சொன்னால் அது வெறும் எலும்புக்கூடாக மாறிவிடும். துணை டவர் நிறுவனத்தின் CMDஆக ஒரு IAS அதிகாரியை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது. எனவே கண்டிப்பாக இது BSNL இயக்குனர் குழுவின் கீழ் செயல்படாது. இது அரசாங்கம் நடத்தும் ஒரு பகல் கொள்ளை. எனவே BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திட 27.03.2018 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறை கூவல் விடுத்துள்ளன. எனவே நமது மாவட்ட சங்கங்கள் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென மத்திய மாநில சங்கங்கள் சார்பாக மாவட்ட சங்கங்களை கேட்டுக் கொள்கிறோம்


புதன், 7 மார்ச், 2018

அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்!


பெண் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்!!
சமுதாயத்தில் சரி பாதியாய் உள்ள பெண்களை பிணைத்துள்ள தளைகளை அறுத்தெரிந்து, சமத்துவ சமுதாயம் படைத்திட சர்வதேச பெண்கள் தினமாம் மார்ச்-8ல் உறுதி ஏற்போம். பெண் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்!