பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்ககோரி ஒருகோடி கையெழுத்து இயக்கம் துவக்கநிகழ்ச்சி மற்றும் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
பல மாதங்களாக நிரப்பபடாமல் காலியாக உள்ள இரண்டு சிஎம்டி இயக்குனர் பதவிகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் உடனே நிரப்ப வேண்டும்.முன்னேற்றம்,சிறந்த சேவை தருவதற்கு தேவையான கருவிகளை நிர்வாகம் வாங்க வேண்டும்.தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொத்துகளை மாற்ற வேண்டும்.மத்திய,மாநில அரசுதுறைகள்,பொதுத்துறைசேவைகளுக்கு பிஎஸ்என்எல் சேவையை கட்டாயபடுத்த வேண்டும்.தங்கு தடையில்லாமல் பிஎஸ்என்எல் சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு, காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பெற்று பிரதமரிடம் வழங்குவதற்கான சிறப்புக்கூட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.
பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு , கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் பி.காமராஜ் தலைமை தாங்கினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும்,கூட்டு நடவடிக்கைக்குழுவின் கன்வீனருமான ஏ.சுப்பரமணியன் அனைவரையும் வரவேற்றார்.ஏஐடியூசி மாநில செயலாளர் அபிஷேகம்,சிஐடியூ பிரதேச செயலாளர் நிலவழகன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி,ஏஐசிசிடியூ மாநில செயலாளர் பாலசுப்புரமணியன், மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர் கப்ரியேல் ,எஸ்என்ஈஏ மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.திரளான ஊழியர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் , பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஒருகோடி கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது,