புதுச்சேரி, ஆக. 6
பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைக் கண்டித்து புதுச்சேரியில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் வேலூர் தொலைதொடர்பு மாவட்ட நிர்வாகத்தில் 10 ஆண்டுகளாக
பணிபுரிந்து வந்த 140 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், அவர்களை உடனே மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு தரவேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன், ஒப்பந்த
ஊழியர் சங்கம் முருகையன் தலைமை தாங்கினர்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட உதவி செயலர் எம்.ஜி.ராஜேந்திரன்,

அகில இந்திய துணைப் பொதுச் செயலர் குமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மகாலிங்கம்,மாநில அமைப்பு செயலர் உஷா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கவுரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக