<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 22 மார்ச், 2015

புதுச்சேரி,மார்ச்.21- பெண்கள் மீதான தாக்குதளுக்கு அனைத்து பகுதி மக்களும் போராட முன்வர வேண்டும் என்று பி.சுகந்தி பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர்சங்கத்தின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் புதுச்சேரி கிளை சார்பில் மகளிர் தின சிறப்புக்கூட்டம் பிஎஸ்என்எல் மணமகிழ் மன்றத்தில் நடைபெற்றது.இச்சிறப்புக்கூட்டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் கன்வீனர் என்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.இணை ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா வரவேற்புரையாற்றினார்.அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் பி. சுகந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவக்கொலைகள் நடைபெற்றுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடைபெற்றுள்ளது. பெற்றோர்களே தங்களது பிள்ளைகள் மீது கவுரவ கொலை செய்யும் நிலை உருவாகியுள்ளது.மேலும் பீகார் போன்ற வடமாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்கள் கனினி பயிலக்கூடாது என்று சாதிசங்க கூட்டத்தில் தீர்மாணம் போடுகிறார்கள்.இத்தகைய பெண்கள் மீது தொடரும் வண்முறைகளை எதிர்த்து ஒரு குறிப்பிட்ட நபர்களே போராடும் நிலையை மாற்றி சமூகத்தில் அணைத்து தரப்பு மக்களும் போராட முன்வரவேண்டும். இந்த ஆனாதிக்க சமூகத்தில் தொடர்ந்து பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவதை எதிர்த்து பெண்களுடன் ஆண்களும் சேர்ந்து போராட வேண்டும் என்று சுகந்தி கேட்டு கொண்டார். திரளான பிஎஸ்என்எல் பெண் ஊழியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக