<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 28 ஜூலை, 2015

பெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள் சுற்றறிக்கை எண் 53ல் குறிப்பிடப்பட்டுள்ள 28.07.2015 அன்று நடைபெற்ற கேடர் பெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள் (MINUTES) வெளியிடப்பட்டுள்ளது.



மாபெரும் வெற்றி


டாக்டர் அப்துல் கலாம் மறைந்தார் இந்திய விண்வெளியின் நாயகன் என்றழைக்கப்படும் நமதுமுன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று ஷில்லாங்கில் INDIAN INSTITUTE OF MANAGEMENT மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 84 ஆவது வயதில் காலமானார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த அஞ்சலி


வெள்ளி, 24 ஜூலை, 2015

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு வழங்காத போனஸை உடனே வழங்ககோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்தப்படி வழங்கப்பட்டு வந்த போனஸை கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்காத நிர்வாகத்தை கண்டிப்பது, கடந்த ஆண்டுக்கான போனஸை ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும், ஒப்பந்ததாரருக்கு சேர வேண்டிய தொகையில் போனஸ் வழங்கிட ஒப்புதல் தந்த பின்னும் தராமல் நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். உடன்பாட்டின்படி போனஸ் தராமல் ஏமாற்றுவதை கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் துவங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் எஸ்.சங்கரன், ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிஐடியூ பிரதேச துணைத்தலைவர் வெ.பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் , என்.கொளஞ்சியப்பன், ஏ.சுப்பிரமணியன், எஸ்.குமார், எஸ்.உஷா, பி.மகாலிங்கம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். திரளான ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். படம் உள்ளது.


புதன், 22 ஜூலை, 2015

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகங்கள்



BSNL அறிவித்த விலையில்லா திட்டங்களை பயன்படுத்துவீர்... பயன்பெறுவீர்.... பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம்


ஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15,000/- கோரி 29.07.2015ல் பேரணி தமிழகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச கூலியை 15,000 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி தமிழகத்தில் 7 மையங்களில் பேரணி



புதன், 8 ஜூலை, 2015

தமிழ் மாநில தலைமைப் பொது மேலாளாருடன் சந்திப்பு… மாநிலத் தலைவர் (AGS) தோழர் S.செல்லப்பா மற்றும் மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் மற்றும் ஆகியோர் இன்று (08.07.2015) தலைமைப் பொது மேலாளரைச் சந்தித்தனர். JTO காலிப்பணியிடங்களை உடனடியாக மறு கணக்கீடு செய்து கார்ப்பரேட் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நமது தலைவர்கள் கோரினர். JTO காலிப்பணியிடங்கள் மறுகணக்கீடு செய்யப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில் கார்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று தலைமைப் பொது மேலாளர் உறுதி கூறினார். எனினும் இதில் ஏற்பட்ட கால தாமதம் என்பது கவலைக்குறியது என குறிப்பிட்டோம். தலைமைப் பொது மேலாளர் அவர்கள் நமது உணர்வினை புரிந்துகொண்டு இப்பிரச்சனையில் விரைந்த நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள BSNL சலுகைகள் சம்பந்தமாக மாவட்ட அளவில் செய்யவேண்டிய பணிகளை விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது. (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது). மாவட்ட மட்டங்களில் நிர்வாகம் இதை விளம்பரப்படுத்துவதிலும் புதிய சந்தாதாரர்களை சேர்ப்பதிலும், நாகர்கோவில் நீங்கலாக எங்கும் வேகமாக செயல்படுவதில்லை என்ற ஆதங்கத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளோம். CGM அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.



ப்ராட் பேண்ட் சேவையை தனியாருக்கு தராதே!!!!



புதன், 1 ஜூலை, 2015

FORUM முடிவுகளும், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும் ….



TTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும் மற்றும் சில செய்திகளும்….



ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய தாமதத்தை தவிர்க்க... ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தாமதாவதை தவிர்க்க நாம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்


ஒப்பந்த ஊழியர் பிரச்சனை தொடர்பாக மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதம் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைக்காக BSNLEU, NFTE BSNL, TNTCWU மற்றும் TMTCLU ஆகிய சங்கங்கள் இணைந்து விடுத்த தர்ணா போராட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட பிரச்சனைகளை மாநில நிர்வாகம் கடிதமாக மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கியுள்ளது.