<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 24 ஜூலை, 2015

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு வழங்காத போனஸை உடனே வழங்ககோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்தப்படி வழங்கப்பட்டு வந்த போனஸை கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்காத நிர்வாகத்தை கண்டிப்பது, கடந்த ஆண்டுக்கான போனஸை ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும், ஒப்பந்ததாரருக்கு சேர வேண்டிய தொகையில் போனஸ் வழங்கிட ஒப்புதல் தந்த பின்னும் தராமல் நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். உடன்பாட்டின்படி போனஸ் தராமல் ஏமாற்றுவதை கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் துவங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் எஸ்.சங்கரன், ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிஐடியூ பிரதேச துணைத்தலைவர் வெ.பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் , என்.கொளஞ்சியப்பன், ஏ.சுப்பிரமணியன், எஸ்.குமார், எஸ்.உஷா, பி.மகாலிங்கம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். திரளான ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். படம் உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக