சனி, 24 டிசம்பர், 2016
ஞாயிறு, 18 டிசம்பர், 2016
நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் பிரமாண்டமான வெற்றி!!! BSNL நிறுவனத்தின் உயிர் நாடியாம் மொபைல் டவர்களை BSNLல் இருந்து தனியாக பிரித்தெடுத்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியினை எதிர்த்து BSNLல் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அனைத்து சங்கங்களும் விடுத்த 15.12.2016 ஒரு நாள் வேலை நிறுத்தம் மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்று இந்த வேலை நிறுத்தத்தை பிரமாண்டமான வெற்றியாக மாற்றியுள்ளார்கள். தமிழகத்திலும் சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். BSNLஐ காப்பாற்ற நடைபெற்ற இந்த பிரமாண்டமான தேச பக்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற உழைத்திட்ட அனைத்து சங்க தலைவர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நமது வாழ்த்துக்கள். நமது கண்ணின் மணியாம் BSNL நிறுவனத்தை பாதுகாக்க அயராது உழைத்திடுவோம். அரசின் தனியார்மய முயற்சிகளை தடுத்திடுவோம்!!
ஞாயிறு, 20 நவம்பர், 2016
பெருந்திரள் தர்ணா தொடங்கியது… நிர்வாகம் கேளாக்காதினராய் இருந்து வருகின்றனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இன்று 18.11.2016 அன்று தமிழ் மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 2000 பேர் பங்கு பெறும் பெருந்திரள் தர்ணா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் வரை நமது போராட்டம் தொடரும்....
ஞாயிறு, 23 அக்டோபர், 2016
Tuesday, 18 October, 2016 ஊழியர்கள் 300 நாட்களுக்கு மேல் விடுப்பை சேர்த்துவைத்துக் கொள்ளலாம்:- பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றம் ஒரு ஊழியர் அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை காசாக்கிக் கொள்ளலாம் என்று இருந்தாலும், ஒரு ஊழியர் எடுக்காமல் வைத்திருக்கும் விடுப்பை 300 நாட்களுக்கு குறைக்கக் கூடாது என ஒரு சிறப்பான தீர்ப்பை சொல்லி உள்ளது. ” ஒரு ஊழியர் அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை மட்டுமே காசாக்கிக் கொள்ளலாம் என இருந்தாலும், அதிகபட்ச வரம்பாக அவர் பயன்படுத்தாத விடுப்பை 300 நாட்கள் மட்டுமே என குறைக்கக் கூடாது என்பது அதன் பொருள் அல்ல. ஒரு ஊழியர் ஓய்வு பெறும் வரை அவரது விடுப்பு சேர்த்துக் கொள்ளலாம்; மனுதாரர் சட்டத்தில் உள்ளது போல அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை காசாக்கிக் கொள்ளலாம்” என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Saturday, 15 October, 2016 பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாமும் 14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் இன்று (15.10.2016) நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்று நம்மிடம் தெரிவித்து விட்டனர். தங்களால் வேறு ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்து விட்டனர். நாம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்து விட்டோம். எனவே நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளோம். எனவே 25.10.2016 அன்று நமது தோழர்களை பெருவாரியாக திரட்டி சென்னையை நோக்கி அணி திரள வேண்டும் என இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணி நீக்க கொடுமையினை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்!!! பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்!!!
துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 26.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம்:- 14.10.2016 அன்று கூடிய FORUMத்தின் CORE COMMITTEE கூட்டம், 26.10.2016 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து ஊழியர்களையும், அதிகாரிகளையும் திரட்டி இந்த முதல் கட்ட இயக்கமான 26.10.2016 ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வெள்ளி, 7 அக்டோபர், 2016
செவ்வாய், 4 அக்டோபர், 2016
BSNLEU demands to restore the off-net facility on Rs.200/- SIM. Com. P. Abhimanyu, GS, met shri S.K. Sinha, GM (Admn.) today, and pointed out that the provision of off-net calls (for Rs.50/-) in the Rs.200/- SIM has been withdrawn. The GS demanded the facility should be immediately restored. The GM (Admn.) responded positively and assured to take needful action.
வெள்ளி, 23 செப்டம்பர், 2016
வியாழன், 8 செப்டம்பர், 2016
புதன், 7 செப்டம்பர், 2016
செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் தமிழக காட்சிகள்... செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் தமிழக BSNLல் உத்வேகத்துடன் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேசத்தை காக்கும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச்செய்த அனைத்து பகுதி தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் மனதார வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)