<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

Saturday, 15 October, 2016 பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாமும் 14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் இன்று (15.10.2016) நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்று நம்மிடம் தெரிவித்து விட்டனர். தங்களால் வேறு ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்து விட்டனர். நாம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்து விட்டோம். எனவே நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளோம். எனவே 25.10.2016 அன்று நமது தோழர்களை பெருவாரியாக திரட்டி சென்னையை நோக்கி அணி திரள வேண்டும் என இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணி நீக்க கொடுமையினை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்!!! பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக