<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 9 ஜனவரி, 2016

பிஎஸ்என்எல் ஊழியர்கள கோரிக்கை பேரணி புதுச்சேரி, ஜன. 9- பேரிடர் காலத்திலும் சிறப்பான சேவை வழங்கிய பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. குறைந்த செலவில் தரமான சேவை தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு சிறந்த சேவை புரிந்தது. மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான கருவிகளை வாங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். நிறுவனத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடந்தது. பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, ரங்கப்பிள்ளை வீதி, நேரு வீதி வழியாக சென்றது.பேரணியில் பிஎஸ்என்எல் ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் சுப்பிரமணி, காமராஜ், சங்கரன், செல்வரங்கம், மதுசூதனன், மணிக்கண்ணன், ஆர்.ராஜநாயகம், கொளஞ்சியப்பன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக