வெள்ளி, 28 ஜூலை, 2017
ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மை வரையறுக்கப்பட்டது. தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின்சார்பாக நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாகவும், தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தைகளின் காரணமாகவும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணித்தன்மை அடிப்படையில் RECATAGARISE செய்யப்பட்டு நிர்வாகம் 24.07.2017 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. அதனை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமலாக்க இரண்டு மாவட்ட சங்கங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.
திங்கள், 24 ஜூலை, 2017
செவ்வாய், 18 ஜூலை, 2017
திங்கள், 10 ஜூலை, 2017
தோழர் ஞானையா மறைந்தார். NFPTE சம்மேளனத்தின் முன்னால் பொது செயலாளர் தோழர் ஞானையா 08.07.2017 அன்று காலை காலமானார். பணி ஓய்விற்குப் பின்பு நல்லதொரு மார்க்சிய எழுத்தாளராக தனது பணியினை சிறப்பாக செய்து வந்தார். மறைந்த தோழர் ஞானையாவிற்கு தமிழ் மாநில சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் நமது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்
விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு -15.07.2017. BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு திருநெல்வேலி, பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் இருக்கும் சுபம் திருமண மண்டபத்தில் 15.07.2017 அன்று நடைபெற உள்ளது. மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் அனைத்து கிளை செயலாளர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.
வியாழன், 6 ஜூலை, 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)