<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 18 அக்டோபர், 2017

PLIஆக ரூ.7,000/- உடனடியாக வழங்க வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2017 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் தமிழக காட்சிகள் PLI வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் 13.10.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கார்ப்பரேட் அலுவலகம் 13.10.2017 அன்று காலை 08.30 மணிக்கு நமது பொது செயலாளரை தொலைபேசியில் அழைத்து மதியம் 12.30 மணிக்கு இது தொடர்பாக விவாதிக்க அழைத்தார். நமது பொது செயலாளர் கொல்கொத்தா தொலைபேசியின் மாநில மாநாட்டில் இருந்தார். துணை பொது செயலாளரும் டெல்லியில் இல்லை. எனவே, 16.10.2017 அன்று காலை அந்த விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என நமது பொது செயலாளர் பதிலளித்துள்ளதுடன், கடைசி நேரத்தில் அழைப்பதை தவிர்த்து போதிய அவகாசம் கொடுத்து சங்கங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


தலைப்பைச் சேருங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக