<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 14 நவம்பர், 2017

மனித சங்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது ஆகிய இயக்கங்களின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக 15.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது மற்றும் 16.11.2017 அன்று மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. 14.11.2017 அன்று புது டெல்லி SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து, பல மாநிலங்களில் தயாரிப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், இந்த தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 23.11.2017 அன்று மதிய உணவு இடைவேளையில் மாவட்ட, மாநில, அகில இந்திய தலைநகர்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது 30.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் வழங்குவது. இந்த மகஜரை மத்திய சங்கங்கள் ஓரிரு நாட்களுக்குள் தங்கள் இணைய தளங்களில் வெளியிடுவார்கள். கிடைத்துள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி இந்த இயக்கங்களை மேலும் சக்தி மிக்கதாக நடத்திடுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக