<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 26 நவம்பர், 2018

PONDY STRIKE SPECIAL METTING


அகில இந்திய AUAB கூட்ட முடிவுகள்



AUAB தமிழ் மாநில தலைவர்களின் சுற்று பயண விவரம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழ் மாநில AUAB தலைவர்களின் பிரச்சார பயண விவரம்




37ஆவது தேசியக்கவுன்சில் கூட்டத்தின் சிறப்பம்சங்கள்



வெள்ளி, 16 நவம்பர், 2018

கால வரையற்ற வேலை நிறுத்ததிற்கான அறிவிப்பு இன்று கொடுக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான வேலை நிறுத்த அறைவிப்பை AUAB தலைவர்கள் இன்று BSNL CMDயிடம் வழங்கினர்.


14.11.2018 பேரணியின் தமிழக காட்சிகள் 01.01.2017 முதல் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும், உண்மை அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு, நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வு கால பலன்கள் ஆகிய கோரிக்கைகளின் மீது மத்திய அமைச்சர் 24.02.218 அன்று கொடுத்த வாக்குறுதியை அமலாக்கக் கோரி AUAB விடுத்த அறைகூவலின் படி 14.11.2018 அன்று நடைபெற்ற பேரணியின் தமிழக காட்சிகள்










AUAB தமிழ் மாநில கூட்ட முடிவுகள் தமிழ் மாநில AUAB கூட்டம் 13.11.2018 அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இணைக்கப்பட்டுள்ளது.




நாடகங்களை நம்பாதீர் BSNL ஊழியர்களின் அதிமுக்கியமான கோரிக்கைகளான 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் உண்மையான அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றை 06.11.2018ல் CMD BSNLக்கு எழுதியுள்ள கடிதம் மூலமாக DOT நிராகரித்திருந்தது. 13.11.2018 அன்று மனித வள இயக்குனரின் பார்வைக்கு இந்தக் கடிதத்தை கொண்டு சென்ற AUAB தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மனித வள இயக்குனர் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அடுத்த நாள், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த அதிகாரியை தொலை தொடர்பு துறை செயலாளர் அழைத்து, அவரது பார்வைக்கு கொண்டு வராமல் இது போன்ற கடிதம் எவ்வாறு வெளியிடப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளாராம். நம்மை பொறுத்த வரை இது ஒரு நாடகம்தான். இந்தக் கதைகளை எல்லாம் நம்ப நாம் தயாராக இல்லை. இதே தொலை தொடர்பு துறையின் செயலாளர் தான் மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்காமால் எட்டு மாத காலமாக அமர்ந்திருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. இனிமேல் நாம் வெத்து கதைகளை நம்ப தயாராக இல்லை. நடவடிக்கைகள் மட்டுமே நமக்கு தேவை. BSNLல் உள்ள 1.85 லட்ச ஊழியர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் தான் சஞ்சார் பவனில் உள்ளவர்களை நியாயமாக செயல்பட வைக்கும். எனவே கட்டுக் கதைகளையும், நயவஞ்சக நாடகங்களையும் நம்பாமல், கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவதற்கான தயாரிப்பில் முழுமையாக இறங்குவோம். நமது நியாயமான கோரிக்கைகளை வென்றடைவோம்.


03.12.2018 முதல் காலவரையற்ற் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல் அன்பார்ந்த தோழர்களே, 14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 03.12.2018 முதல் அரசின் திட்டங்களான NOFN, NFS மற்றும் LWE ஆகிய திட்டங்களையும் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது நியாயமான உரிமையான ஊதிய மாற்றத்தை வென்றடையவும், உயிரினும் இனிய BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம். 03.12.2018லிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம். இது ஒன்றே நமது; கோரிக்கைகளை வென்றடையச் செய்யும். நமது ஒன்றுபட்ட சக்தியினை அரசுக்கு உணர வைப்போம். நமது கோரிக்கையினை வென்றடைவோம்.


புதன், 14 நவம்பர், 2018

AUAB தமிழ் மாநில கூட்ட முடிவுகள்


03.12.2018 முதல் காலவரையற்ற் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல் அன்பார்ந்த தோழர்களே, 14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 03.12.2018 முதல் அரசின் திட்டங்களான NOFN, NFS மற்றும் LWE ஆகிய திட்டங்களையும் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது நியாயமான உரிமையான ஊதிய மாற்றத்தை வென்றடையவும், உயிரினும் இனிய BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம். 03.12.2018லிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம். இது ஒன்றே நமது; கோரிக்கைகளை வென்றடையச் செய்யும். நமது ஒன்றுபட்ட சக்தியினை அரசுக்கு உணர வைப்போம். நமது கோரிக்கையினை வென்றடைவோம்.


PONDY AUAB RALLY PHOTOS



PONDICHERRY AUAB RALLY




திங்கள், 5 நவம்பர், 2018

wish you all comrade Happy Diwali


ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் தலையிட CMD BSNLஇடம் வேண்டுகோள்:. 02.11.2018 அன்று DOT செயலாளரிடம் பேச்சு வார்த்தை முடிந்த பின் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் NFTE பொது செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் ஆகியோர், BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாக தரப்பில் வீட்டு வாடகைப்படி மாற்றத்தை வழங்க விரும்பாத காரணத்தால் ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதை அவரிடம் தெரிவித்தனர். 31.12.2016ல் இருந்ததை போன்று வீட்டு வாடகைப்படியை முடக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் தலைவர்கள் CMDஇடம் சுட்டிக் காட்டினார்கள். கால தாமதமின்றி ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், BSNL CMD தலையிட்டு, நிர்வாக தரப்பு உறுப்பினர்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை தரவேண்டும் என இரண்டு பொது செயலாளர்களும் அவரைக் கேட்டுக் கொண்டனர். ஊழியர் தரப்பின் கோரிக்கைகளை கவனித்த BSNL CMD, இதில் ஆவன செய்வதாக தெரிவித்தார்.


DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் AUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள்



நவம்பர் 14 பேரணியை வெற்றிகரமாக்குவோம்! DOT செயலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB முடிவு. ஏற்கனவே அறிவித்தபடி 02.11.2018 அன்று மாலை DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்ற பிரச்சனையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆனால் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றில் சில முன்னேற்றங்கள் உள்ளன. DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் நடைபெற்ற AUAB கூட்டத்தில் நவம்பர் 14 பேரணியை மிகவும் சக்தி மிக்கதாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. விவரங்கள் நாளை இணைய தளத்தில் வெளியிடப்படும்.


20.01.2019 அன்று JTO இலாகா தேர்வு நடைபெறும்!!! JTO இலாகா தேர்வை நடத்த வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வற்புறுத்தி வந்தது. இந்த பிரச்சனையை DIRECTOR(HR), GM(Rectt) மற்றும் GM(Estt) ஆகியோருடன் பலமுறை விவாதித்தது. அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள CPSU CADRE HIERARCHYயை காரணம் காட்டி JTO இலாகா தேர்வை நடத்த நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தது. எனினும் BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவு, JTO இலாகா தேர்வினை நடத்த தனது ஒப்புதலை வழங்கியது. தற்போது 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான JTO இலாகா தேர்வினை நடத்த கால அட்டவணையை கார்ப்பரேட் அலுவலகத்தின் RECRUITMENT பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி: மனுக்களை ONLINE மூலம் பதிவு துவங்கும் நாள் :- 16.11.2018 மனுக்களை ONLINE மூலம் பதிவு செய்ய இறுதி நாள் :- 20.12.2018 ONLINE மூலம் தேர்வு நடைபெறும் நாள் :- 20.01.2019


DOT செயலாளர், 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு AUAB தலைவர்களை சந்திக்கிறார். DOTயின் செயலாளர் திருமிகு அருணா சுந்தரராஜன் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் என BSNL கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. AUAB விடுத்துள்ள போராட்ட அறைகூவல்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2018, நவம்பர் 30ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது என்கிற முடிவை DOTயின் செயலாளருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். DOTயின் செயலாளருக்கும் AUAB தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பது என்பது உண்மையில் நல்லதொரு முன்னேற்றம் தான். ஆனால் 02.11.2018 அன்று நடைபெறக் கூடிய கூட்டத்திலேயே நமது அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என நமது தோழர்கள் கருதி விடக்கூடாது. மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழியின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் எட்டு மாத காலம் DOT இருந்தது என்பதுதானே நமது கடந்த கால அனுபவம். எனவே 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு மற்றும் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் தொடர்பான 2வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டு மொத்தமாக அமலாக்குவது ஆகிய நமது கோரிக்கைகளை வென்றடைவதற்கான வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஊழியர்களை தயார் படுத்தும் பணியில் தங்கு தடை ஏதும் இன்றி தொடர்ந்து ஈடுபடுவோம். ஒன்று பட்ட உறுதியான போராட்டங்களே நமது கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.


AUABயின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்தில் 30.10.2018 அன்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள் சில







AUAB சார்பாக 29.10.2018 அன்று தமிழகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்புகளின் காட்சிகள்