<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 16 நவம்பர், 2018

நாடகங்களை நம்பாதீர் BSNL ஊழியர்களின் அதிமுக்கியமான கோரிக்கைகளான 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் உண்மையான அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றை 06.11.2018ல் CMD BSNLக்கு எழுதியுள்ள கடிதம் மூலமாக DOT நிராகரித்திருந்தது. 13.11.2018 அன்று மனித வள இயக்குனரின் பார்வைக்கு இந்தக் கடிதத்தை கொண்டு சென்ற AUAB தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மனித வள இயக்குனர் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அடுத்த நாள், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த அதிகாரியை தொலை தொடர்பு துறை செயலாளர் அழைத்து, அவரது பார்வைக்கு கொண்டு வராமல் இது போன்ற கடிதம் எவ்வாறு வெளியிடப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளாராம். நம்மை பொறுத்த வரை இது ஒரு நாடகம்தான். இந்தக் கதைகளை எல்லாம் நம்ப நாம் தயாராக இல்லை. இதே தொலை தொடர்பு துறையின் செயலாளர் தான் மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்காமால் எட்டு மாத காலமாக அமர்ந்திருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. இனிமேல் நாம் வெத்து கதைகளை நம்ப தயாராக இல்லை. நடவடிக்கைகள் மட்டுமே நமக்கு தேவை. BSNLல் உள்ள 1.85 லட்ச ஊழியர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் தான் சஞ்சார் பவனில் உள்ளவர்களை நியாயமாக செயல்பட வைக்கும். எனவே கட்டுக் கதைகளையும், நயவஞ்சக நாடகங்களையும் நம்பாமல், கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவதற்கான தயாரிப்பில் முழுமையாக இறங்குவோம். நமது நியாயமான கோரிக்கைகளை வென்றடைவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக