<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 8 ஜூலை, 2014

கலால்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.

கலால்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.


புதுச்சேரியில் மத்திய அரசின் செயல்பாட்டில் இயங்கும் கலால் மற்றும் சுங்கத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  வழங்கப்பட்ட சம்பளத்தை குறைத்ததை கண்டித்தும் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் அமைத்த காரணத்திற்காக அங்கு பணியாற்றிய நான்கு ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 7.07.2014 காலை 9மணி அளவில் கலால்துறை அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் 20க்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் சுப்பரமணி,மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைபொதுச்செயலர் குமார் ஆகியோர் பேசினார்கள்.கலந்து கொண்ட அணைவருக்கும் மாவட்டசங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக