புதுச்சேரி, ஏப். 26-
பிஎஸ்என்எல் ஊழியர் நலன்களுக்காக ஒரு போராட்டத்தையும் நடத்தாத சங்கம் தான் என்.எப்.டி.ஈ சங்கம் என்று பி.இந்திரா குற்றஞ்சாட்டினார்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் அங்கீகாரதேர்தல் மே 10 ல் நாடுமுழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் சிறப்புக்கூட்டம் மனமகிழ்மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட தலைவர் ஜி.சங்கரன், எஸ்என்ஏடிடிஏ சங்க மாவட்ட தலைவர் ஜி.முருகன் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தமிழ்மாநில உதவித்தலைவர் பி.இந்திரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தில் 90ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்டுள்ளனர். நமது சங்கம் முதன்மையான சங்கமாக இருந்தாலும், நிறுவனத்தை பாதுகாக்க அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 10ஆயிரம் கோடி இலாபம் ஈட்டிய போது என்எப்டிஈ சங்கம் பொருப்புகளில் இருந்தது. அப்போது ஊழியர்களுக்கு சேரவேண்டிய போனஸ் தொகையில் வெறும் 75விழுக்காட்டை மட்டுமே பெற்று கொடுத்தனர். மீதி 25 விழுக்காட்டை நிறுவனத்துக்கு விட்டு கொடுத்தனர். பின்னர் 2004ல் சங்க அங்கீகார தேர்தலில் நமது சங்கமான பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெற்ற உடன் ஊழியர் நலன்களில் அக்கரையோடு 2 போனஸை பெற்று கொடுத்தோம் என்றார். இன்றைக்கு தனியார் நிறுவனங்கள் 10லட்சம் செல்பேசி இணைப்புகள் பெற்றுள்ளேயானார்கள் என்றால், நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 25லட்சம் இணைப்புகளை பெற்றுள்ளோம். இதற்கு ஒட்டு மொத்த ஊழியர்களும் தான் காரணம் என்றார். இன்றைக்கு நம்மோடு போட்டியிடக்கூடிய என்எப்டிஈ சங்கத்தை இணைத்து பிஎஸ்என்எல் வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் மிகப்பெரிய போராட்த்தை நடத்தினோம். ஆனால் என்எப்டிஈ சங்கம் மட்டும் ஊழியர்களின் நலன்களை முன்னிருத்தி ஏதாவது போராட்டம் நடத்தியிருக்குமா என்று கேள்வி எழுப்பினார். எனவே தான் ஊழியர்கள் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கு முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். இவ்வாறு பி.இந்திரா பேசினார்.
முன்னதாக மாவட்ட உதவி பொருளாளர் என்.ராஜேஸ்வரி, வரவேற்றார். நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், சுப்புரமணியன், முருகையன் உள்ளிட்ட திரளான ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக