ஞாயிறு, 24 டிசம்பர், 2017
வியாழன், 30 நவம்பர், 2017
புதன், 29 நவம்பர், 2017
தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்களின் சுற்று பயண பட்டியல் தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சங்க தலைவர்கள் கலந்துக் கொள்ளும் வேலை நிறுத்த சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தேதிகளை முடிவு செய்து அந்தக் கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் தலைவர்களின் பட்டி
ஞாயிறு, 26 நவம்பர், 2017
Com.R.K.Kohli passed away. CHQ is extremely sorry to inform that veteran telecom trade union leader, com.R.K.Kohli has passed away today morning at New Delhi. He had been unwell for some time. Com.P.Abhimanyu, GS and com.S.Chellappa, AGS, went to com.R.K.Kohli's house at Pitampura in New Delhi, placed a wreath on behalf of BSNLEU, and paid their last respects. BSNLEU pays it's respectful homage to the departed leader, and also pays it's heartfelt condolences to his family members and comrades.
வெள்ளி, 24 நவம்பர், 2017
Human chain programme was a grand success. The human chain programme, called on by the unions and associations yesterday, was a grand success. The programme was an unprecedented success in New Delhi. Similarly, as per the reports being received from each and every district, the human chain programme has been massively participated in by the employees. Naturally, the newly forged unity of all the unions and associations in BSNL, has generated a great amount of enthusiasm among both the Non-Executives and Executives throughout the country. This human chain programme foretells that the forthcoming 2 day strike, to be held on 12th and 13th of December is also going to be a total success. The CHQ of BSNLEU heartily congratulates the entire employees, as well as all the unions and associations for making the human chain programme a grand success.
வியாழன், 16 நவம்பர், 2017
தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள் தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் 14.11.2017 அன்று காலை NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் தருவது, மனித சங்கிலி இயக்கம் மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ஆகிய இயக்கங்களை வெற்றிகரமாக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய், 14 நவம்பர், 2017
மனித சங்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது ஆகிய இயக்கங்களின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக 15.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது மற்றும் 16.11.2017 அன்று மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. 14.11.2017 அன்று புது டெல்லி SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து, பல மாநிலங்களில் தயாரிப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், இந்த தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 23.11.2017 அன்று மதிய உணவு இடைவேளையில் மாவட்ட, மாநில, அகில இந்திய தலைநகர்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது 30.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் வழங்குவது. இந்த மகஜரை மத்திய சங்கங்கள் ஓரிரு நாட்களுக்குள் தங்கள் இணைய தளங்களில் வெளியிடுவார்கள். கிடைத்துள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி இந்த இயக்கங்களை மேலும் சக்தி மிக்கதாக நடத்திடுவோம்.
வியாழன், 2 நவம்பர், 2017
புதன், 18 அக்டோபர், 2017
PLI தொடர்பான பேச்சு வார்த்தை 2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக விவாதித்தார். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy GS மற்றும் தோழர் R.S. சவுகான் VP ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின் PLI கமிட்டியின் கூட்டத்தை விரைவில் கூட்டி 2015-16 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள PLI மற்றும் PLI வழங்குவதற்கான நிரந்தரமான ஒரு பர்முலா ஆகியவற்றை இறுதி செய்யுமாறு GM(SR) அவர்களுக்கு DIRECTOR(HR) உத்தரவிட்டுள்ளார்.
PLIஆக ரூ.7,000/- உடனடியாக வழங்க வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2017 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் தமிழக காட்சிகள் PLI வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் 13.10.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கார்ப்பரேட் அலுவலகம் 13.10.2017 அன்று காலை 08.30 மணிக்கு நமது பொது செயலாளரை தொலைபேசியில் அழைத்து மதியம் 12.30 மணிக்கு இது தொடர்பாக விவாதிக்க அழைத்தார். நமது பொது செயலாளர் கொல்கொத்தா தொலைபேசியின் மாநில மாநாட்டில் இருந்தார். துணை பொது செயலாளரும் டெல்லியில் இல்லை. எனவே, 16.10.2017 அன்று காலை அந்த விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என நமது பொது செயலாளர் பதிலளித்துள்ளதுடன், கடைசி நேரத்தில் அழைப்பதை தவிர்த்து போதிய அவகாசம் கொடுத்து சங்கங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதன், 11 அக்டோபர், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)