<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 10 பிப்ரவரி, 2018

BSNL-MTNL இணைப்பு? BSNL-MTNL இணைப்பு பிரச்சனை அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக சில மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன. MTNL நிறுவனத்தை பங்கு சந்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், MTNLன் கடன் சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், MTNL பகுதிகளில் நமது வலைத்தளத்தை விரிவு படுத்துவதற்கு அதிகமான் நிதி தேவைப்படுவதால் தேவையான நிதி உதவியை அரசாங்கம் செய்ய வேண்டும் மற்றும் BSNL மற்றும் MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரே விதமான ஊதிய விகிதம் இருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பின்னரே அரசாங்கம் இணைப்பு தொடர்பாக திட்டமிட வேண்டும் என்று BSNLல் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக