சனி, 10 பிப்ரவரி, 2018
BSNL டவர்கள் பராமரிப்பு OUTSOURCING தொடர்பாக பாராளுமன்றத்தில் தரப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான செய்தி... BSNL டவர்களை பராமரிப்பது OUTSOURCING தரப்படுவது தொடர்பாக மக்களவையில் 07.02.2018 அன்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில் 26,287 டவர்கள் பராமரிக்க BSNL டெண்டர் விட்டுள்ளதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிலில் இந்த OUTSOURCINGகிற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 08.02.2018 அன்று BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்களை சந்தித்த நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந்த் ஆகியோர் இந்த பிரச்சனை தொடர்பாக விவாதித்தனர். டவர்கள் பராமரிப்பினை OUTSOURCING விடுவது தொடர்பாக நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் விவாதிக்காத சூழ்நிலையில், டவர்களின் பராமரிப்பு பணிகள் OUTSOURCING விடுவதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கவில்லை என எவ்வாறு மக்களவையில் பதிலளிக்கப்பட்டது என தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கான டெண்டரை மூன்றாண்டுகளுக்கு முன் BSNL வெளியிட்டதாக BSNL CMD தெரிவித்தார். ஆனால் அதன் மீது சில தனியார் நிறுவனங்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த OUTSOURCING திட்டத்திற்கு BSNLன் நிர்வாகக் குழுவோ அல்லது இயக்குனர் குழுவோ இதுவரை ஒப்புதல் தரவில்லை. ஆகையால் இந்த பிரச்சனையை தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் விவாதிக்கவில்லை என்று BSNL CMD தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட இந்த பதிலில் தொழிற்சங்கங்களின் மீது சுமத்தப்பட்ட சந்தேகம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தெரிவித்ததை BSNL CMD ஏற்றுக் கொண்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக