<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 2 மே, 2018

தோழர் அசோக் மித்ரா மறைந்தார் முது பெரும் பொருளாதார அறிஞரும், மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பணியாறியவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் அசோக் மித்ரா 01.05.2018 அன்று காலை கொல்கொத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். பொருளாதாரத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள தோழர் அசோக் மித்ரா தனது வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தின் லட்சியங்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர். மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராகவும், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆணையத்திலும் பணியாற்றியிருந்த தோழர் அசோக்மித்ரா பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களின் மீது எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். 90 வயதான தோழர் அசோக் மித்ரா அவர்களின் மறைவிற்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. மேலும் படிக்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக