<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 2 மே, 2018

தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி காலமானார். இந்திய தபால் தந்தி இயக்கத்தின் மூத்த தோழரும், தோழர் K.G.போஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றியவருமான அருமை தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி அவர்கள் தனது 95ஆவது வயதில் 30.04.2018 அன்று மாலை காலமானார். சிறிது காலமாக உடல் நலக் குறைவால் கொல்கொத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். BSNL ஊழியர் சங்கம் உருவான முதல் மாநாட்டில் அவர் நமது சங்கத்தின் புரவலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவு BSNL ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கே ஒரு பெரும் இழப்பு. தோழர் சிசிர் பட்டாச்சார்ஜிக்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்கிக்கொள்கிறோம். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 01.05.2018 மாலை முதல் மூன்று நாட்களுக்கு நமது சங்கத்தின் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் படிக்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக