<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 1 டிசம்பர், 2018

அன்புள்ள தோழரே, 30.11.2018 அன்று AUAB தலைவர்களுக்கும் BSNL நிர்வாகத்திற்கும் இடையே இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. காலையில் BSNL CMD மற்றும் Director(HR) ஆகியோருடனும் மாலையில் Director (HR) உடனும் நடைபெற்றன. காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக BSNL நிர்வாகத்திற்கும், தொலை தொடர்பு துறை செயலாளருக்கும் இடையே தொடர்ச்சியான கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. 28.11.2018 அன்று மத்திய அமைச்சரும் BSNL CMD அவர்களை சந்தித்துள்ளார். மத்திய அமைச்சர் BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படும், ஓய்வூதிய மாற்றம் செய்யப்படும், BSNL ஓய்வூதிய பங்களிப்பு செய்வதில் அரசு விதிகள் அமலாக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு காலவரையறை நிர்ணயிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ஊதிய மாற்றம் செய்ய முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சனையிலும் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை. வெறும் உறுதிமொழிகள் மட்டுமே. மத்திய அமைச்சர் AUABயை அழைத்து விவாதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரை BSNL CMD கேட்டுக் கொண்டார். மேலும் ஊதிய மாற்ற பிரச்சனைய கையாள BSNL நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஊதியமாற்றத்தை தங்களின் பட்ஜெட்டிற்குள் தீர்வு காண்பதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு அமைச்சர் எதையும் கூறவில்லை. BSNLல் எந்த ஒரு வேலை நிறுத்தமும் நடைபெறக்கூடாது என்றும் கூறியுள்ளார். நாளை(ஞாயிற்றுக் கிழமை) நன்ப்கல் 12 மணிக்கு AUAB தலைவர்களை BSNL CMD பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அமைச்சர் டெல்லியில் இல்லை. எனவே வேலை நிறுத்ததை தொடர AUAB முடிவெடுத்துள்ளது. இந்த விவரங்களை ஊழியர்களிடம் தெரிவிப்பதுடன் வேலை நிறுத்த தயாரிப்புகளை வேகப்படுத்துமாறு மத்திய சங்கம் கேட்டு கொண்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக