சனி, 1 டிசம்பர், 2018
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL (AUAB), BSNL, Puducherry 605001. பத்திரிக்கைச் செய்தி புதுச்சேரி 02.12.2018 பெறுதல் : ஆசிரியர் செய்திப்பிரிவு, நாளிதழ் / தொலைக்காட்சி, புதுச்சேரி. அன்புடையீர், வணக்கம். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் ஒன்றிணைந்து வருகிற 03.12.2018 திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் : (1) 4-ஜி அலைக்கற்றை சேவையினை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குவதற்கு அனுமதி கொடு; (2) மூன்றாவது ஊதிய உயர்வினை 15 சதம் இணைத்து வழங்கு. (3) அனைத்து பி.எஸ்.என்.எல் பென்ஷன்தார்களுக்கும் 01.01.2017 முதல் பென்ஷனை மாற்றியமை ; (4) பி.எஸ்.என்.எல் வழங்க வேண்டிய பென்ஷன் பங்கை அரசின் விதிப்படி செலுத்து ; (5) 2-வது ஊதியக் குழுவில் விடுபட்டுப் போயுள்ள பிரச்சினைகளை தீர்த்து வை ; மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி 30.10.2018 அன்று தர்ணா போராட்டமும், அதனைத் தொடர்ந்து 14.11.2018 அன்று இந்தியா முழுவதும் ஊழியர்களின் பேரணியும் நடைபெற்றது. ஆனால் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் மேலே கண்ட கோரிக்கைகைளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது அதிலிருந்து பின்வாங்குகிறது. எனவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் வருகிற 03.12.2018 திங்கட்கிழமை முதல் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இச்செய்தியினை தங்கள் நாளிதழில் வெளியிடுவதோடு 03.12.2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொலைபேசி நிலையம் முன் நடைபெறும் ஆர்ப்ப்பாட்டச் செய்தியினையும் தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் பிரசுரிக்குமாறு / ஒலி / ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். (எம்.செல்வரங்கம்) (ஏ.சுப்ரமணியன்) தலைவர். கன்வீனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக