ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019
18.12.2019 முதல் நடைபெற உள்ள மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகள் 1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு! 2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்! 3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து! ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்திலிருந்து பிரிப்பது என மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி மொழியை அமல்படுத்து. 4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்! 5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு! 6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமுமின்றி ஒப்புதல் வழங்கு! ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு! 7)அ) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு! வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு! ஆ) BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு தேவையான LETTER OF COMFORT உடனே வழங்கு! இ) BSNL இயக்குனர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நிரப்பிடு! 8) BSNLமொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக