ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019
போராட்டத்திற்கு தயாராவோம்! 30.01.2019 அன்று தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரோடு நடைபெற்ற விவாதத்தின் தொடர்ச்சியாக 30 மற்றும் 31ஆம் தேதிகளில் BSNL CMD உடன் AUAB தலைவர்கள் விவாதித்தனர். அதன் தொடர்ச்சியாக 31.01.2019 பிற்பகல் AUAB தலைவர்கள், தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரை சந்தித்தனர். அவர் 5% ஊதிய நிர்ணய பலனை தருவது கூட சிரமம் என்று கூறி, தலைவர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தினார். 30.01.19 அன்று அவர் முன்மொழிந்த 5%ஊதிய நிர்ணய பலனையே AUAB ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பின்னணியில் 01.02.2019 அன்று முற்பகல் 11.30 மணிக்கு AUAB கூட உள்ளது. நமது கோரிக்கை பட்டியலின் மேல் ஒரு பொருத்தமான முடிவை இந்தக் கூட்டம் மேற்கொள்ளும்.எனவே ஊழியர்களும், அதிகாரிகளும் போராட்டத்திற்கு தயாராவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக