<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

போராட்டத்திற்கு தயாராவோம்! 30.01.2019 அன்று தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரோடு நடைபெற்ற விவாதத்தின் தொடர்ச்சியாக 30 மற்றும் 31ஆம் தேதிகளில் BSNL CMD உடன் AUAB தலைவர்கள் விவாதித்தனர். அதன் தொடர்ச்சியாக 31.01.2019 பிற்பகல் AUAB தலைவர்கள், தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரை சந்தித்தனர். அவர் 5% ஊதிய நிர்ணய பலனை தருவது கூட சிரமம் என்று கூறி, தலைவர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தினார். 30.01.19 அன்று அவர் முன்மொழிந்த 5%ஊதிய நிர்ணய பலனையே AUAB ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பின்னணியில் 01.02.2019 அன்று முற்பகல் 11.30 மணிக்கு AUAB கூட உள்ளது. நமது கோரிக்கை பட்டியலின் மேல் ஒரு பொருத்தமான முடிவை இந்தக் கூட்டம் மேற்கொள்ளும்.எனவே ஊழியர்களும், அதிகாரிகளும் போராட்டத்திற்கு தயாராவோம்.


ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிக்கும் மத்திய அமைச்சரின் உறுதி மொழியிலிருந்து தற்போது விலகிச் செல்வதற்கு AUAB எதிர்ப்பு AUAB மற்றும் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையே 03.12.2018 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிப்பது என உறுதியளிக்கப்பட்டது. எனினும் DoTயில் உள்ள அதிகாரிகள் அந்த உறுதி மொழியிலிருந்து விலக முயற்சிக்கின்றனர். உதாரணமாக, DoTயிலிருந்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாக்காவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மத்திய அமைச்சரின் முடிவு நீர்த்து போகும் வண்ணம் இருக்கிறது. அந்தக் கடிதத்தில் ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிக்க முடியுமா என DoP&PW இடம் விளக்கம் கேட்டுள்ளது. 30.01.2019 அன்று தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரோடு நடைபெற்றக் கூட்டத்தில் கூட DDG (Estt), DoT, ஊதிய மாற்றத்திற்கு பின்னர் தான் ஓய்வூதிய மாற்றம் செய்ய முடியும் என வாதிட்டார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த AUAB தலைவர்கள், மத்திய அமைச்சரின் உறுதிமொழி அமலாக்கப்பட வேண்டும் என கடுமையாக வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர், AUAB மற்றும் DDG(Estt) DoT ஆகியோர் இது தொடர்பாக மேலும் விவாதிக்க வழிகாட்டினார். அதன் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை பிரிப்பது என்ற மத்திய அமைச்சரின் முடிவு அமலாக்கப்பட வேண்டுமென AUAB தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர். இந்தக் கடும் எதிர்ப்பை கவனித்த DoTயின் DDG(Estt.), திரு S.K.ஜெயின் அவர்கள் இந்த பிரச்சனை தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் மேலும் விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார். குறைவாகக் காண்பி


சென்னை தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்




18.02.2019 முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டங்கள் தொடர்பாக AUAB எடுத்துள்ள முடிவுகள் 1) பல்வேறு எதார்த்த நிலைமைகளை கணக்கில் கொண்டு, BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் 18.02.2019 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட AUAB அறைகூவல் விடுக்கின்றது. 2) நமது போரட்ட கோரிக்கைகளின் மீது பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 11.02.2019 முதல் 5 நாட்கள் தெருமுனை பிரச்சாரம் செய்வது. 3) மாநில/மாவட்ட மட்டங்களில் பிப்ரவரி 12/13 தேதிகளில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது. 4) BSNLஇன் புத்தாக்கம் உள்ளிட்ட நமது கோரிக்கைகளின் மீது அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆதரவை திரட்டுவது.


18.12.2019 முதல் நடைபெற உள்ள மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகள் 1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு! 2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்! 3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து! ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்திலிருந்து பிரிப்பது என மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி மொழியை அமல்படுத்து. 4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்! 5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு! 6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமுமின்றி ஒப்புதல் வழங்கு! ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு! 7)அ) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு! வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு! ஆ) BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு தேவையான LETTER OF COMFORT உடனே வழங்கு! இ) BSNL இயக்குனர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நிரப்பிடு! 8) BSNLமொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு!


சனி, 26 ஜனவரி, 2019

அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள்


ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL (AUAB)



18.02.2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல்

25.01.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
1) பல்வேறு எதார்த்த நிலைமைகளை கணக்கில் கொண்டு, BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் 18.02.2019 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட AUAB அறைகூவல் விடுக்கின்றது.
2) நமது போரட்ட கோரிக்கைகளின் மீது பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 11.02.2019 முதல் 5 நாட்கள் தெருமுனை பிரச்சாரம் செய்வது.
3) மாநில/மாவட்ட மட்டங்களில் பிப்ரவரி 12/13 தேதிகளில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது.
4) BSNLஇன் புத்தாக்கம் உள்ளிட்ட நமது கோரிக்கைகளின் மீது அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆதரவை திரட்டுவது.

கோரிக்கைகள்:- 
1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு!
2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்!
3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து!
4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்!
5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு!
6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்கு!
ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு! 
7) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு! வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு!
8) BSNLமொபைல் டவர்களை பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு!

செவ்வாய், 8 ஜனவரி, 2019

பொதுத்துறைகளை பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை நமது BSNLலிலும் வெற்றிகரமாக்குவோம்.


பொதுத்துறைகளை பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை நமது BSNLலிலும் வெற்றிகரமாக்குவோம். ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.




பொதுத்துறைகளை பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை நமது BSNLலிலும் வெற்றிகரமாக்குவோம். ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.


வெள்ளி, 21 டிசம்பர், 2018

Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!

Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!



The Mysuru All India Conference has taken a historic decision to strengthen working class unity. This is the time when greater unity has to be built to settle the wage revision, pension revision and to safeguard BSNL from the attacks of the government. Revival of BSNL is our historic task. Without unity, we cannot achieve all these. This is not the time to quarrel among us on petty issues. This is not the time to test who is bigger and who is smaller. Particularly, the unity of the two recognised unions- BSNLEU and NFTE- is the need of the hour. The Mysuru All India Conference deeply deliberated this. Finally, the Conference decided to get the Recognition Rule modified, to strengthen unity. As per the Non- Executives’ Recognition Rules, if the first union gets 50% votes or more, than the second union will not get recognition. The Mysuru All India Conference has unanimously passed a resolution, demanding that this clause should be removed. We are hopeful that this will pave the way for closer coordination and understanding between the BSNLEU and NFTE- the two major trade unions of BSNL

2018, டிசம்பர் 26 முதல் 29 வரை AUAB சங்கங்களின் இணைந்த பொதுக்குழுக் கூட்டங்களை நடத்திடுக…