<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 29 ஆகஸ்ட், 2015

வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை!!! மத்திய அமைச்சர்கள் குழுவோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.


நமது கோரிக்கையை மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையத்திற்கு அனுப்பப் பட்டது தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து கடந்த 25.08.2015 அன்று 7 மையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,000 என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். சென்னையில் மண்டல மத்திய தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் கொடுத்திருந்த மனுவை அவர் மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்.


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

புதுச்சேரி,ஆக.27- செப்டம்பர் வேலைநிறுத்த சிறப்பு கூட்டம் செய்தி Inbox

புதுச்சேரி,ஆக.27-

இந்திய தொழிலாளி வர்க்கைத்தை டிஸ்போஸ் கப்பாக பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் மோடி அரசு என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.


செப்டம்பர் 2ல் நடைபெறும் பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு என்எப்டிஈ மாவட்ட செயலாளர் பி.காமராஜ் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சுப்புரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளராக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தமிழ்மாநிலச் செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் பங்கேற்று  பேசுகையில்,
சென்னையில் நோக்கியா நிறுவனம் சமிபத்தில் மூடப்பட்டது. அந்நிறுவனத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வந்தனர். நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி அந்நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் சமிபத்தில் மூடியது. கடந்த ஆண்டுகளில் மட்டும்  இந்த நோக்கியா நிறுவனம் ரு.27ஆயிரத்தி 200கோடி மேல் இலாபம் ஈட்டியது. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை
என்ற காரணத்தை சொல்லி தான் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோ சாப்ட் நிறுவனம்  கடந்த 2014 – 2015 ஆண்டில் மட்டும் ரு.1லட்சத்து 36ஆயிரத்து 432 கோடி இலாபம் ஈட்டியது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் தான் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது என்று கூறினார்கள். எனவே தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிலாளி வர்க்கைத்தை
டிஸ்போஸ் கப்பாக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை தான் இந்தியாவில் சிவப்பு கம்பளம் விரித்து பாஜக மோடி அரசு வரவேற்கிறது.
அதுமட்டும் அல்ல கடந்த காலங்களில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்னர் வேலைநிறுத்த நோட்டிஸை நிர்வாகத்திடம்  கொடுக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் தற்போது மோடி அரசு கொண்டு வரும் சட்டத்தில் 45நாட்களுக்கு முன்னரே வேலைநிறுத்த நோட்டிஸ் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்
வேலைநிறுத்ததில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரு.20ஆயிரம் அபராதம், இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்  என்ற கடுமையான சட்டங்களை எதிர்த்து தான் செப்டம்பர் 2ல்  நாடுதழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 2லட்சம் நிரந்தர ஊழியர்களும், ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். புதுச்சேரியில் கடந்த காலங்களில் 95சதவிதம் ஊழியர்கள் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை 100சதவீதம் ஊழியர்களும் வேலை நிறுத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பாபுராதாகிருஷ்ணன் வேண்டுகோள்விடுத்தார்.
முன்னதாக என்எப்டிஈ மாநில உதவி செயலர் கே.நடராஜன்,  எஸ்என்ஏடிடிஏ சங்கத்தின மத்திய ஒருங்கிணைப்பாளர் பெர்லின்ஜசக், எப்என்டிஓ மாவட்ட செயலாளர் கே.ஜீவானந்தம், ஓப்ந்த ஊழியர் சங்க அகில இந்திய துணைபொதுச்செயலாளர் சி.குமார் ஆகியோர் பேசினார்கள். இதில் திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.

செப்டம்பர் வேலைநிறுத்த சிறப்பு கூட்டம் செய்தி

புதன், 26 ஆகஸ்ட், 2015

TNTCWU இயக்க புகைப்படங்கள்


ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 15,000 கேட்டு ஏழு மையங்களில் கோரிக்கை மனு அளித்தல்

ஜூலை மாதத்தில் BSNLதான் அதிக இணைப்புகளை கொடுத்துள்ளது

அகில இந்திய சங்க மையக்கூட்ட முடிவுகளும், ப்ராட் பேண்ட் தொடர்பாக JAC கடிதமும்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

புதுச்சேரி,ஆக.25- குறைந்தபட்ச மாத ஊதியம் ரு.15ஆயிரம் வழங்ககோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை பேரணி நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாத ஊதியம் ரு.15ஆயிரம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஈபிஎப், ஈஎஸ்ஐ முறையாக செலுத்த வேண்டும். போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயாநகரில் உள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை துணை அலுவலகம் எதிரில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி,கடலுர் மாவட்ட தலைவர்கள் சங்கரன், அண்ணாமலை மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர்கள் முருகையன், பாண்டியன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ பிரதேச செயலாளர் நிலவழகன், சங்க நிர்வாகிகள் சம்பந்தம், சுப்புரமணியன், கொளஞ்சியப்பன், குமார், உஷா, பாரதிதாசன் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக இந்திரா காந்தி சிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் இறுதியாக மத்திய தொழிலாளர் நலத்துறை அதிகாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இப்போராட்டத்தில் கடலுர், புதுச்சேரியை சேர்ந்த திரளான ஊழியர்கள் பங்கேற்றனர். படம் உள்ளது.






வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

கோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

வட்டியை குறைக்க வலியுறுத்தி சொசைட்டி தலைவருடன் சந்திப்பு

தேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

20.08.2015]Notification to hold the meeting of the committee on new scheme of Bonus/PLI based on Performance Management System on 31st August, 2015

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பி.எஸ்.என்.எல் டவர்களை தனியே பிரிக்காதே - ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல் டவர்களை தனியே பிரிக்காதே - ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ...
தற்சமயம் அனைத்து செல் போன் டவர்களும் பி.எஸ்.என்.எல் வசம் உள்ளது. அதாவது மக்களின் வரிப்பணத்தில் உருவான சொத்து அரசுத்துறையின் கையில் பத்திரமாக உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த டவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து டவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்கிற ஒரு அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னால் தான் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் சேவையை தனியே பிரித்து பி.பி.என்.எல் என்கிற அமைப்பை உருவாக்கியது. அதாவது பி.எஸ்.என்.எல் என்கிற அமைப்பின் கீரிம் போன்ற பகுதிகளை தனியே பிரித்து எடுத்து பி.எஸ்.என்.எல்-யை நஷ்டமாக்க முயற்சிப்பது. பின்னர் பிரித்த பகுதிகளை முதலாளிகளுக்கு கொடுத்து விடுவது என்பது தான் மோடி அரசின் திட்டம் .. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல்-லில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஒன்று திரண்டு இன்று (12.08.2015) மாலை கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.. புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு 14.08.2015 அன்று நடைபெற உள்ள தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு கூட்டத்திற்கு Special Casual Leave வழங்க தலைமைப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.


துணை டவர் நிறுவனத்தை கைவிடு! ஆகஸ்ட் 12 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்.


BSNLஐ பாதுகாக்க அஞ்சல் அட்டை இயக்கம் BSNLஐ பாதுகாக்க அகில இந்திய FORUMத்தின் அறைகூவலான அஞ்சல் அட்டை இயக்கத்தை வெற்றிகரமாக்குவோம்


சனி, 8 ஆகஸ்ட், 2015

FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS

Circular No.5 07th August, 2015
To
General Secretaries of all Unions
and Associations of Forum.
Comrade,
I wish to draw your kind attention to the following:
(1) Demonstrations on 12.08.2015, protesting the decision of the Cabinet
for the formation of a Subsidiary Tower Company.
We have come to know through the media that, the Cabinet, in it’s meeting held on
05.08.2015, has given approval for the formation of a Subsidiary Tower Company. All
the 65,000 mobile towers of BSNL, will be hived off to the Subsidiary Tower Company,
through this decision. The entire Unions and Associations have been opposing right
from the beginning, the idea of forming a Subsidiary Tower Company. It is one of the
most important issue in the charter of demands on which the entire BSNL employees
went on a two day strike on 21st & 22nd April, 2015. The decision of the Cabinet is
detrimental to the future of BSNL. The Forum has decided to hold nation wide protest
demonstrations on 12.08.2015, protesting the decision of the Cabinet for the formation
of Subsidiary Tower Company. I request you to inform your circle and district units to
effectively participate in this demonstration.
(2) Massive post card campaign for the revival of BSNL
In the Forum meeting held on 26.06.2015, it has been decided to conduct a massive
“post card campaign” in the month of August. It is also decided that this campaign is to
be conducted from 10th to 22nd August, 2015. The decision of the Forum is that one
post card should go from each of the 2.25 lakh BSNL employees, to the Hon’ble
Minister of Communications, demanding immediate steps for the revival of BSNL. The
text of the post card shall be as follows:-
“Hon’ble Minister of Communications & IT is requested to immediately
settle the demands submitted by the Forum, for the revival of BSNL.”
The post card should be signed by the individual employee, with his name, designation
and the name of the SSA. If the task of sending the post cards is left to the individual
employees, everyone may not send the post card. Hence, it is decided that the Forum
at the SSA level should undertake the responsibility of purchasing the post cards in
bulk, get the matter hand written on the post cards, obtain the signatures of the
employees, and finally post the post cards. Let us arrange to send one post card from
each of the 2.25 lakh BSNL employees. Let us make the Minister and the government
to understand the determination of the BSNL employees to revive BSNL.
Address of the Minister of Communications & IT:
Shri Ravi Shankar Prasad,
Minister of Communications & IT,
Sanchar Bhawan, 20, Ashoka Road,
New Delhi 110001
(3) Campaign for widening BSNL’s mobile and landline customer base.
The Forum has already called upon the BSNL employees to conduct a massive
campaign to popularise the “Night Free Call Scheme”, as well as the “Free Incoming on
Roaming Scheme”, and thereby widen BSNL’s mobile and landline customer base. The
impact of the implementation of the Night Free Call and Free Roaming schemes is
being regularly reviewed by the Forum, through it’s interaction with the CMD BSNL and
Director (CFA). As per the information given by the CMD BSNL, in the review meeting
held on 24.07.2015, the number of mobile connections given by BSNL stood at 11 lakh
and 15 lakh in the months of June and July, 2015, respectively. Whereas, the number of
mobile connections given before the implementation of the Free Roaming, i.e., in the
month of August was only 8.6 lakh. Similarly, due to the introduction of the Night Free
Call scheme, surrender of landlines has got reduced to 30,000 to 40,000 per month.
Before the introduction of the Night Free Call scheme the surrender was 1,20,000
landlines per month. Further, it is reported that 10 circles have turned positive in the
landline segment, after the implementation of the Night Free Call scheme. All these
details show that with more effort we can definitely achieve the revival of BSNL. Hence,
I request you to kindly ensure that your circle and district units actively participate in this
campaign.
P. Abhimanyu,
Convener
Mob: 9868231113

புதுச்சேரியில் நினைவு அஞ்சலி கூட்டம்

புதுச்சேரி, ஜுலை.30-
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கம் இணைந்து புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் திருவுருபடத்திற்கு மெழுகுவத்தி ஏந்தி  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.முருகையன், ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.நிர்வாகிகள் சுப்பரமணியன், கொளஞ்சியப்பன்,ரவிச்சந்திரன், மகாலிங்கம், உஷா ,உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள்  பங்கேற்று  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் திருவுருபடத்திற்கு மலர்துவி இரண்டு நிமிட மவுன அஞ்சலி
செலுத்தினர்.

படம் உள்ளது.

விரிவடைந்த மாநிலச் செயற்குழு விரிவடைந்த மாநிலச் செயற்குழு அறிவிப்பு


நிதி வசூல் இயக்கம் BSNLCCWF அகில இந்திய மாநாட்டு நிதி வசூல் இயக்கம்