புதுச்சேரி,ஆக.27-
இந்திய தொழிலாளி வர்க்கைத்தை டிஸ்போஸ் கப்பாக பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் மோடி அரசு என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
செப்டம்பர் 2ல் நடைபெறும் பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு என்எப்டிஈ மாவட்ட செயலாளர் பி.காமராஜ் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சுப்புரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளராக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தமிழ்மாநிலச் செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில்,
சென்னையில் நோக்கியா நிறுவனம் சமிபத்தில் மூடப்பட்டது. அந்நிறுவனத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வந்தனர். நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி அந்நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் சமிபத்தில் மூடியது. கடந்த ஆண்டுகளில் மட்டும் இந்த நோக்கியா நிறுவனம் ரு.27ஆயிரத்தி 200கோடி மேல் இலாபம் ஈட்டியது. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை
என்ற காரணத்தை சொல்லி தான் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோ சாப்ட் நிறுவனம் கடந்த 2014 – 2015 ஆண்டில் மட்டும் ரு.1லட்சத்து 36ஆயிரத்து 432 கோடி இலாபம் ஈட்டியது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் தான் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது என்று கூறினார்கள். எனவே தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிலாளி வர்க்கைத்தை
டிஸ்போஸ் கப்பாக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை தான் இந்தியாவில் சிவப்பு கம்பளம் விரித்து பாஜக மோடி அரசு வரவேற்கிறது.
அதுமட்டும் அல்ல கடந்த காலங்களில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்னர் வேலைநிறுத்த நோட்டிஸை நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் தற்போது மோடி அரசு கொண்டு வரும் சட்டத்தில் 45நாட்களுக்கு முன்னரே வேலைநிறுத்த நோட்டிஸ் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்
வேலைநிறுத்ததில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரு.20ஆயிரம் அபராதம், இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்ற கடுமையான சட்டங்களை எதிர்த்து தான் செப்டம்பர் 2ல் நாடுதழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 2லட்சம் நிரந்தர ஊழியர்களும், ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். புதுச்சேரியில் கடந்த காலங்களில் 95சதவிதம் ஊழியர்கள் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை 100சதவீதம் ஊழியர்களும் வேலை நிறுத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பாபுராதாகிருஷ்ணன் வேண்டுகோள்விடுத்தார்.
முன்னதாக என்எப்டிஈ மாநில உதவி செயலர் கே.நடராஜன், எஸ்என்ஏடிடிஏ சங்கத்தின மத்திய ஒருங்கிணைப்பாளர் பெர்லின்ஜசக், எப்என்டிஓ மாவட்ட செயலாளர் கே.ஜீவானந்தம், ஓப்ந்த ஊழியர் சங்க அகில இந்திய துணைபொதுச்செயலாளர் சி.குமார் ஆகியோர் பேசினார்கள். இதில் திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக