செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015
புதுச்சேரி,ஆக.25- குறைந்தபட்ச மாத ஊதியம் ரு.15ஆயிரம் வழங்ககோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை பேரணி நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாத ஊதியம் ரு.15ஆயிரம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஈபிஎப், ஈஎஸ்ஐ முறையாக செலுத்த வேண்டும். போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயாநகரில் உள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை துணை அலுவலகம் எதிரில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி,கடலுர் மாவட்ட தலைவர்கள் சங்கரன், அண்ணாமலை மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர்கள் முருகையன், பாண்டியன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ பிரதேச செயலாளர் நிலவழகன், சங்க நிர்வாகிகள் சம்பந்தம், சுப்புரமணியன், கொளஞ்சியப்பன், குமார், உஷா, பாரதிதாசன் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக இந்திரா காந்தி சிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் இறுதியாக மத்திய தொழிலாளர் நலத்துறை அதிகாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இப்போராட்டத்தில் கடலுர், புதுச்சேரியை சேர்ந்த திரளான ஊழியர்கள் பங்கேற்றனர். படம் உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக