<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தனர்.

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 15வது ஆண்டு அமைப்பு தினத்தை  முன்னிட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் இரத்தானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.இந்நிகழ்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிஐடியூ பிரதேச செயலாளர் வே.கு.நிலவழகன் இரத்தான முகாமை துவக்கி வைத்து பேசினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் என்.கொளஞ்சியப்பன்,மாவட்ட செயலாளர் எ.சுப்புரமணியன்,தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் சி.குமார்,தமிழ்மாநில அமைப்பு செயலர் எஸ்.உஷா,மாவட்ட செயலாளர் பி.மகாலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதா பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் ஊர்வலமாக சென்று புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்று இரத்தானம் வழங்கினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக