<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 26 பிப்ரவரி, 2014

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,பிப்.26-
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுபட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்.குறைந்தபட்ச ஊதியம் என்பதற்கு பதிலாக பிஎஸ்என்எல் லின் குறைந்தபட்ச ஊதியமாக மாற்ற வேண்டும்.ஈபிஎப்,ஈபிஎப்,ஈஎஸ்ஐ,கிராஜுட்டி,போனஸ் உள்ளிட்ட சமூக பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும்.பிஎஸ்என்எல் நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும் .பிஎஸ்என்எல் சேவைகளை  மேம்படுத்த போதுமான கருவிகளை வாங்கவேண்டும்.சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.நிர்வாகம் ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,செயலாளர் சுப்ரமணியன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.உஷா,அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் குமார்,மாவட்ட செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக