<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 22 மார்ச், 2014

BSNL ஊழியர் சங்கத்தின் 14வது அமைப்பு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (22-3-2014) புதுச்சேரி தொலைப்பேசி அலுவலகத்தில் சங்க கொடியேற்றுவிழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.











BSNL ஊழியர் சங்கத்தின் 14வது அமைப்பு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (22-3-2014) புதுச்சேரி தொலைப்பேசி அலுவலகத்தில் சங்க கொடியேற்றுவிழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு புதுச்சேரி மாவட்ட சங்க தலைவர் S.சங்கரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரதான தொலைப்பேசி வாயில் முன்பு சங்கத்தின் கொடியை மாவட்ட அமைப்பு செயலாளர் பலராமன் கொடியை ஏற்றி வைத்தார்.அதேப்போல் தலைமை பொதுமேலாளர் அலுவலக வாயில் முன்பு சங்க உறுப்பினர் சேகர், STS அவர்கள் கொடி ஏற்றிவைத்தார்.இவ்விழாவில் மாவட்ட உதவித்தலைவர் N.கொளஞ்சியப்பன்,செயலாளர் S.சுப்ரமணியன்,பொருளாளர் A.முருகையன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் C.குமார்,தமிழ்மாநில அமைப்பு செயலாளர் S. உஷா,மாவட்டசெயலாளர் மகாலிங்கம்,ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் சிவக்குமார்,செயலாளர் பாலசுப்பரமணியன் உள்ளிட்ட திரளான BSNL ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக அமைப்பு தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

செவ்வாய், 18 மார்ச், 2014

என்எல்சி ஒப்பந்த தொழிலாளி சுட்டு கொள்ளப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி,மார்ச்.18-

என்எல்சி ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமாரை சுட்ட தொழில்பாதுகாப்புபடை வீரர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜ்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை  என்எல்சி நிர்வாகம் உறுதி படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,தொமுச மாநில உதவிச்செயலாளர் அன்பழன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலர் குமார்,சேவா சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் ரகு,ஒப்பந்த ஊழியர் மாவட்டச்சங்கத்தின் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

செவ்வாய், 11 மார்ச், 2014

மகளிர் மசோதாவை நிறைவேற்றதா காங்கிரஸ்,BJP கட்சிகளை வரும் பாராளுமன்ற தேர்தலில் புறக்கனிக்கவேண்டும் என்று M.கிரிஜா கேட்டு கொண்டார். சர்வதேச மகளிர் தின சிறப்புக்கூட்டம் புதுச்சேரி BSNL தலைமை அலுவலகத்தில் உள்ள மனமகிழ்மன்றத்தில் நடைபெற்றது.இச்சிறப்புக்கூட்டத்திற்கு பொதுமேலாளர் A.V.சௌந்தரம் தலைமை தாங்கினார்.மகளிர்கள் உமாசந்தானம், சாந்தி, மல்லிகா, சசிகலா,பத்மினி,கண்ணம்மாள் முன்னிலை வகித்தனர். மாலதிபத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். எல்ஐசி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் M.கிரிஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,மத்திய காங்கிரஸ் அரசு ஆந்திரா மக்களின் எதிர்ப்பையும் மீறி தெலுங்கான மசோதாவை பாராளுமன்றத்தில் யாருக்கும் தெரியாத வகையில் தொலைக்காட்சி ஒலிபரப்பை தடைசெய்து நிறைவேற்றியது.ஆனால் காலங்காலமாக பெண்கள் சட்டமன்றத்திலும்,நாடாளுமன்றத்திலும் 33சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மறுத்து வருகிறது.முந்தைய பிஜேபியும் அரசும் இதே நிலை தான் எடுத்தது .எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ,BJP கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். BSNL துணைப்பொதுமேலாளர் லலிதா மற்றும் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு புதுவை அமைப்பாளர் N.ராஜேஸ்வரி ஆகியோர் பேசினார்கள் .70க்கும் மேற்பட்ட பெண் தோழியர்கள் பங்கேற்ற இச்சிறப்புக்கூட்டத்தில் இறுதியாக S.உஷா நன்றி உரையாற்றினார்.







திங்கள், 10 மார்ச், 2014

சர்வதேச மகளிர் தின சிறப்புக்கூட்டம்.

சர்வதேச மகளிர் தின சிறப்புக்கூட்டம்.

சர்வதேச மகளிர் தின சிறப்புக்கூட்டம்.

நாள்:11.03.2014 மாலை 4மணிக்கு
இடம்: தொலைப்பேசி  மனமகிழ்மன்றம்- (BSNL) புதுச்சேரி.

தலைமை : திருமதி. A.V.சௌந்தரம், A.G.M.,புதுச்சேரி.

முன்னிலை : திருமதி. உமாசந்தானம்,SAC., V.சாந்தி,SSS,R.மல்லிகா,STM, S.சசிகலா,STS., R.பத்மினி,SDE., V.கண்ணம்மாள்,TTA.,

வரவேற்புரை : திருமதி.மாலதிபத்மநாபன்,SSS,

சிறப்புரை :- 
திருமதி.M.கிரிஜா,  அகில இந்திய இணைச்செயலாளர்,AIIEA,கோவை.

திருமதி.லலிதா,DGM (CFA),புதுச்சேரி.
               
                   சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் சம அந்தஸ்து பெறுவது எக்காலம்? சர்வதேசப் பெண்கள் தினத்தில் கூடுவோம்.. விவாதிப்போம்.. செயலாற்றுவோம்.

                                   அனைவரும் வாரீர்!   வாரீர்! !
நன்றியுரை ,                                                                                      இவண்,
தோழர்.S. உஷா,C/L                                                                 N.ராஜேஸ்வரி,SSS,அமைப்பாளர்,
                                                                            உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு-புதுச்சேரி.  

வியாழன், 6 மார்ச், 2014

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி,மார்ச்.5- ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் செல்லும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கேபிள்களை திட்டமிட்டு ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் கேபிள்களை பதிக்கும் போது துண்டித்து உள்ளது.பிஎஸ்என்எல் கேபிள்கள் சேதாரம் ஏற்பட்டதால் புதுச்சேரி நகரம்,கரிகலாம்பாக்கம் தொலைபேசி நிலையங்களின் சேவைகள் முற்றிலும் பாதித்துள்ளது.இதனால் 8செல்பேசி கோபுரங்களின் சேவையும் பாதித்துள்ளது.எனவே பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியதை கண்டித்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி இப்போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.போராட்டக்குழு கன்வீனர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.எஸ்என்ஈஏ வின் மாநில உதவி செயலாளர் செல்வம்,ஊழியர் சங்க மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,தலைவர் சங்கரன்,சேவா சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி,அதிகாரிகள் சங்க நிர்வாகி நாராயணசாமி,பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் அன்பழகன்,ரகு உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள்,அதிகாரிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.







செவ்வாய், 4 மார்ச், 2014

தோழர்கள் .ஜகஜீவன்ராம் ,இராமலிங்கம் ஆகியோர்களுக்கு பணிஓய்வு பாராட்டுவிழா.


நமது  மாவட்டச்சங்கத்தின் சார்பில் பணிஓய்வு பாராட்டுவிழா புதுச்சேரி மாவட்டச்சங்கத்தின் சார்பில்  (மார்ச் -4)செவ்வாய்கிழமை மாலை 6மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு மாவட்டத்தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,மாவட்ட செயலாளர் சுப்ரமணியன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் முருகையன்,ஓய்வூதியர் சங்க தலைவர்கள் நடராஜன்,பாலசுப்புரமணின், மாவட்டச்சங்க நிர்வாகிகள் ,ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் திரளாக இவ்விழாவில் பங்கேற்று இரண்டு தோழர்களையும் பாராட்டி கதராடை அணிவித்தனர்.