<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 11 மார்ச், 2014

மகளிர் மசோதாவை நிறைவேற்றதா காங்கிரஸ்,BJP கட்சிகளை வரும் பாராளுமன்ற தேர்தலில் புறக்கனிக்கவேண்டும் என்று M.கிரிஜா கேட்டு கொண்டார். சர்வதேச மகளிர் தின சிறப்புக்கூட்டம் புதுச்சேரி BSNL தலைமை அலுவலகத்தில் உள்ள மனமகிழ்மன்றத்தில் நடைபெற்றது.இச்சிறப்புக்கூட்டத்திற்கு பொதுமேலாளர் A.V.சௌந்தரம் தலைமை தாங்கினார்.மகளிர்கள் உமாசந்தானம், சாந்தி, மல்லிகா, சசிகலா,பத்மினி,கண்ணம்மாள் முன்னிலை வகித்தனர். மாலதிபத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். எல்ஐசி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் M.கிரிஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,மத்திய காங்கிரஸ் அரசு ஆந்திரா மக்களின் எதிர்ப்பையும் மீறி தெலுங்கான மசோதாவை பாராளுமன்றத்தில் யாருக்கும் தெரியாத வகையில் தொலைக்காட்சி ஒலிபரப்பை தடைசெய்து நிறைவேற்றியது.ஆனால் காலங்காலமாக பெண்கள் சட்டமன்றத்திலும்,நாடாளுமன்றத்திலும் 33சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மறுத்து வருகிறது.முந்தைய பிஜேபியும் அரசும் இதே நிலை தான் எடுத்தது .எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ,BJP கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். BSNL துணைப்பொதுமேலாளர் லலிதா மற்றும் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு புதுவை அமைப்பாளர் N.ராஜேஸ்வரி ஆகியோர் பேசினார்கள் .70க்கும் மேற்பட்ட பெண் தோழியர்கள் பங்கேற்ற இச்சிறப்புக்கூட்டத்தில் இறுதியாக S.உஷா நன்றி உரையாற்றினார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக