<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 22 மார்ச், 2014

BSNL ஊழியர் சங்கத்தின் 14வது அமைப்பு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (22-3-2014) புதுச்சேரி தொலைப்பேசி அலுவலகத்தில் சங்க கொடியேற்றுவிழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.











BSNL ஊழியர் சங்கத்தின் 14வது அமைப்பு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (22-3-2014) புதுச்சேரி தொலைப்பேசி அலுவலகத்தில் சங்க கொடியேற்றுவிழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு புதுச்சேரி மாவட்ட சங்க தலைவர் S.சங்கரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரதான தொலைப்பேசி வாயில் முன்பு சங்கத்தின் கொடியை மாவட்ட அமைப்பு செயலாளர் பலராமன் கொடியை ஏற்றி வைத்தார்.அதேப்போல் தலைமை பொதுமேலாளர் அலுவலக வாயில் முன்பு சங்க உறுப்பினர் சேகர், STS அவர்கள் கொடி ஏற்றிவைத்தார்.இவ்விழாவில் மாவட்ட உதவித்தலைவர் N.கொளஞ்சியப்பன்,செயலாளர் S.சுப்ரமணியன்,பொருளாளர் A.முருகையன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் C.குமார்,தமிழ்மாநில அமைப்பு செயலாளர் S. உஷா,மாவட்டசெயலாளர் மகாலிங்கம்,ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் சிவக்குமார்,செயலாளர் பாலசுப்பரமணியன் உள்ளிட்ட திரளான BSNL ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக அமைப்பு தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக