வியாழன், 6 மார்ச், 2014
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி,மார்ச்.5- ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் செல்லும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கேபிள்களை திட்டமிட்டு ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் கேபிள்களை பதிக்கும் போது துண்டித்து உள்ளது.பிஎஸ்என்எல் கேபிள்கள் சேதாரம் ஏற்பட்டதால் புதுச்சேரி நகரம்,கரிகலாம்பாக்கம் தொலைபேசி நிலையங்களின் சேவைகள் முற்றிலும் பாதித்துள்ளது.இதனால் 8செல்பேசி கோபுரங்களின் சேவையும் பாதித்துள்ளது.எனவே பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியதை கண்டித்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி இப்போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.போராட்டக்குழு கன்வீனர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.எஸ்என்ஈஏ வின் மாநில உதவி செயலாளர் செல்வம்,ஊழியர் சங்க மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,தலைவர் சங்கரன்,சேவா சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி,அதிகாரிகள் சங்க நிர்வாகி நாராயணசாமி,பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் அன்பழகன்,ரகு உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள்,அதிகாரிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக