<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 18 மார்ச், 2014

என்எல்சி ஒப்பந்த தொழிலாளி சுட்டு கொள்ளப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி,மார்ச்.18-

என்எல்சி ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமாரை சுட்ட தொழில்பாதுகாப்புபடை வீரர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜ்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை  என்எல்சி நிர்வாகம் உறுதி படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,தொமுச மாநில உதவிச்செயலாளர் அன்பழன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலர் குமார்,சேவா சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் ரகு,ஒப்பந்த ஊழியர் மாவட்டச்சங்கத்தின் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக